economics

img

1952க்குப் பின் பலத்த அடிவாங்கிய இந்தியப் பொருளாதாரம்.. நடப்பாண்டில் ஜிடிபி - மைனஸ் 7.7.சதவிகிதம்...

புதுதில்லி:
2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்திய நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற மிகமோச மான நிலைக்குச் சென்றது.

இரண்டாவது காலாண்டான ஜூலை - செப்டம்பருக்கு இடையிலும் அது மைனஸ்7.5 சதவிகிதம் என்ற நிலை யிலேயே தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ஜிடிபி வீழ்ச்சியைச் சந்தித்ததன் மூலம், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக இந்தியா பொருளா தார மந்த நிலைக்குள் நுழைந்தது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி நிலை குறித்தஅறிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் (NSO)தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 2020-21 நிதியாண்டில் இந்தியா  மைனஸ் 7.7 சதவிகிதம் என்ற அளவில்வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.அதாவது, 2019-20 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 4.2சதவிகிதம் என்று இருந்த நிலையில், அது 2020-21 நிதியாண்டில் மைனஸ் 7.7 சதவிகிதம் என்று மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக, பொருளாதாரத்தின் அத்தனை துறைகளும் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தக் காலத்தில், வேளாண்துறை மட்டுமே தப்பித்து இருக்கிறது. மற்றபடி உற்பத்தித் துறையை எடுத்துக்கொண் டால், நடப்பாண்டில் மைனஸ் 9.4 சதவிகிதம் என்றஅளவிற்கு சரிவைச் சந்தித்து இருக்கிறது என்றும்மத்திய புள்ளியியல் அலு வலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

;