economics

img

விலைவாசி 11 ஆண்டுகளில் இல்லாத கடும் உயர்வு.... மொத்த விலைப் பணவீக்கம் 10.49 சதவிகிதம்.....

புதுதில்லி:
நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு10.49 சதவிகிதமாக அதிகரித்துள் ளது. ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க(Wholesale Price Index -WPI) புள்ளிவிவரங்களை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட நிலையில், 2021 மார்ச் மாதத்தில் 7.39 சதவிகிதமாக இருந்த மொத்தவிலைப் பணவீக்க விகிதம் (WPI), மார்ச் மாதத்தில் 10.49 சதவிகிதமாக அதிகரித்துள்ளது

ரியவந்துள்ளது.ஒரே மாதத்தில், மொத்த விலைப்பணவீக்கம் 3.83 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், 2021 பிப்ரவரியில் 4.17 சதவிகிதமாக இருந்த மொத்த விலைப் பணவீக்க விகிதத்தோடு ஒப்பிட்டால், இரண்டே மாதத்தில் 6.32 சதவிகிதமும், இதையே ஓராண்டுக்கு முந்தைய நிலையோடு கணக்கிட்டால், 9.91 சதவிகிதம் அளவிற்கும் பணவீக்கம் அதிகரித்துள் ளது.ஏனெனில், 2020 ஏப்ரலில், மொத்தவிலைப் பணவீக்கம் 0.58 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத் தக்கது. தனித்தனியாக பார்த்தால், இதேஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 4.92 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள்மற்றும் மின்சார பணவீக்கம் 20.94 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 10.25 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோலின் பணவீக்க விகிதம் 42.37 சதவிகிதமாகவும், அதிவேக டீசலின் பணவீக்க விகிதம் 33.82 சதவிகிதமாகவும் உள்ளது.

மொத்த விலை பணவீக்க குறியீட்டில் முக்கிய இடம் வகிக்கும் உற்பத்தி பொருட்களின் பணவீக்கமானது 7.34 சதவிகிதத்தில் இருந்து 9.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அமைச்சகத்தின் தரவுகளின்படி, உணவுப் பொருட்களில் - பருப்பு வகைகள், பழங்கள், முட்டை மற்றும்இறைச்சிகளின் மொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 10.74 சதவிகிதம், பழங்கள் மீதான பணவீக்கம் 27.43 சதவிகிதம், பாலின் மீதான பணவீக்க விகிதம் 2.04 சதவிகிதம், முட்டை-இறைச்சி-மீன் மீதான பணவீக்க விகிதம் 10.88 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது.உணவுப் பொருட்கள் அல்லாத பணவீக்கம் (Non-food particles inflation) 15.58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உணவு அல்லாத பொருட்களில் எண்ணெய் விதைபணவீக்க விகிதம் 29.95 சதவிகிதமாகவும், கனிம விலை விகிதம் 19.60 சதவிகிதமாகவும், கச்சா பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயு பணவீக்கவிகிதம் 79.56 சதவிகிதமாகவும் உள்ளது.

காற்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மீதான மொத்த பணவீக்கம் மட்டுமே ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது. காய்கறிகளின் பணவீக்க விகிதம் 9.03 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதில், உருளைக் கிழங்கின் பணவீக்க விகிதம் 30.44 சதவிகிதம், வெங்காயத்தின் பணவீக்கம் 19.72 சதவிகிதம், தானியங்களின் பணவீக்கம் 3.32 சதவிகிதம், நெல் மீதான பணவீக்கம் 0.92 சதவிகிதம், கோதுமை மீதான பணவீக்கவிகிதம் 3.29 சதவிகிதம் என்று குறைந்துள்ளது.ஒட்டுமொத்தமாக, மொத்த விலைப் பணவீக்கம் 2021 ஏப்ரலில் 9.35 சதவிகிதமாக இருக்கும் என்றுபொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால், கணிப்பைத் தாண்டி அது 10.49 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால், நடப்பு 2021 மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதமானது, மேலும் உயர்ந்து13 முதல் 13.5 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

;