economics

img

ஜிடிபி 0.4 சதவிகிதமா? வாய்ப்பே இல்லை... அடித்துச் சொல்லும் சுப்பிரமணியசாமி....

புதுதில்லி:
2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல்காலாண்டில் மைனஸ் 24.4 சதவிகிதம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் மைனஸ் 7.3 சதவிகிதம் எனதொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி விகிதம் வீழ்ச்சியைச் சந்தித்தது. 

வரலாற்றில் முதன்முறையாக, பொருளாதார மந்த நிலைக்குள்ளும் இந்தியா நுழைந்தது.ஆனால், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், ஜிடிபி சற்று வளர்ச்சிப்பாதையை நோக்கி திரும்பியிருப்பதாகவும், 0.4 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாகவும் மத்திய அரசு அண்மையில் புள்ளி விவரங் களை வெளியிட்டது.

இந்நிலையில், தவறான கணக் கீட்டின் அடிப்படையில் இந்த ஜிடிபி புள்ளிவிவரம் இருப்பதாகவும், 0.4 சதவிகித ஜிடிபி வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்றும் பாஜக தலைவரான சுப்பிரமணியசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.லாஸ்பேயர்ஸ் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி (Laspeyres Price Index Number) ஜிடிபி விகிதத்தை கணக்கிட்டால் அது மைனஸ் 10 சதவிகிதமாக இருந்திருக் கும் இதுவே பாஷே குறியீடு (PaascheIndex) அடிப்படையில் கணக்கிட்டால் அது மைனஸ் 15 சதவிகிதமாக இருந்திருக்கும் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். ஒருபோதும் 0.4 சதவிகித வளர்ச்சிக்குவாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் முறைசாரா துறைகளில் எதிர்மறையான வளர்ச்சியினை யூகித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால், அது லாஸ்பேயர்ஸ் விலைக் குறியீட்டின் படி (Laspeyres Price Index) இந்தியாவின் ஜிடிபி விகிதம் மைனஸ் 10 சதவிகிதமாக இருக்கும். இதையே, பாஷே குறியீட்டைப் (Paasche Index) பயன்படுத்தினால் மைனஸ் 15 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

லாஸ்பேயர்ஸ் விலைக் குறியீடு என்பது பொருளாதாரத்தின் பொதுவான விலை நிலை மற்றும்வாழ்க்கைச் செலவை அளவிடுவதற்கும், பணவீக்கத்தினை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு குறியீடாகும். பாஷே குறியீடு என்பது ஒரு
நுகர்வோர் விலைக் குறியீடாகும்.

;