economics

img

வட்டி வருவாய்க்கும் இனி வரி விதிக்கப்படும்..... வருங்கால வைப்பு நிதியில் கை வைத்த நிர்மலா சீதாராமன்....

புதுதில்லி:
வருங்கால வைப்பு நிதியில், 2.5 லட்சம் ரூபாய்க்குமேலான பி.எப். பங்களிப் புக்கு கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு, தொழிலாளர் கள் இனி வரி செலுத்த வேண்டும் என்று மோடி அரசு பட் ஜெட்டில் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், இதுவரை வரியில்லா வட்டிவருமானம் பெற்று வந்தவர் கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்குமுன் ஏற்கெனவே2016-ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே வருங்கால வைப்பு நிதிபணத்துக்கு வரி விதிக்க முன்மொழியப்பட்டது.அன்றைய தினம், இபிஎப் பணத்தில் 60 சதவிகிதத் தொகைக்கு கிடைக்கும் வட்டிதொகை மீது வரி விதிக்க பட்ஜெட்டில் முன்மொழியப்பட் டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பின்னர் கைவிடப்பட்டது.

எனினும், இந்தமுறை மோடி அரசு நினைத்ததைச் சாதித்துக் கொண்டுள்ளது. அதிக வருமானம் ஈட்டுவோர் மீது மட்டுமே தற்போது வரிவிதிக்கப்படுவதாகவும், இதனால் மிகக் குறைவானவர் களே பாதிக்கப்படுவார்கள் என்றும் மோடி அரசு சமாளித்துள்ளது.ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியச் சட்டத்தை மோடி அரசுஅமல்படுத்துகிறது. இந்த சட் டத்தின்படி, ஒரு ஊழியரின் வருமானத்தில் அடிப்படை சம்பளம் 50 சதவிகிதம் அளவிற்காவது இருக்க வேண்டும்என்பதால், ஏராளமானோருக்கு அடிப்படை சம்பளம் உயரும். அதைத்தொடர்ந்து பிஎப் பங்களிப்பும் உயரும். அவ்வாறு உயரும்போது அரசுக்கான வரியும் அதிகரிக்கும் என்று மோடி கணக்குப் போட்டுள்ளதாக தெரிகிறது.

;