economics

img

ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.08% உயர்வு!

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், உணவு பொருட்களின் பணவீக்கம் 9.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.87 சதவிகிதமாகவும், உணவு பொருட்களின் பணவீக்கம் 8.6.9 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த மே மாதத்தில் 5.34 சதவிதமாக இருந்த கிராமப்புற பணவீக்கம் ஜூன் மாதத்தின் 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4.78 சதவிகிதமாக இருந்தது.
கடந்த மே மாதத்தில் 4.21 சதவிதமாக இருந்த நகர்ப்புற பணவீக்கம், ஜூன் மாதத்தில் 4.39 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4.96 சதவிகிதமாக இருந்தது.