economics

img

6.77 கோடி பேர் வருமான வரி தாக்கல்!

2023-24 நிதியாண்டில், ஜூலை 31-ஆம் தேதி வரை 6.77 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 16.1% அதிகமாகும்.

ஜூலை 31-ஆம் தேதியில் மட்டும் 64.33 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். 53.67 லட்சம் பேர் முதல் முறையாக வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

5.63 கோடி கணக்குகள் இ-வெரிபைட். அதில் 3.44 கோடி வருமான வரி கணக்குகள் (61%) ஜூலை 31-ஆம் தேதியில் செயலாக்கப்பட்டிருக்கிறது.

01.07.23 முதல் 31.07.23 வரை ஈ-ஃபைலிங் போர்ட்டலில் 32 கோடி உள்நுழைவுகள் நடந்ததாகவும். ஜூலை 31 அன்று மட்டும் 2.74 கோடி உள்நுழைவுகள் நடந்திருப்பதாக வருமான துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதத்திலேயே டின் 2.0 கட்டண முறையின் மூலம் 1.26 கோடி செல்லான்கள் பெறப்பட்டதாக வருமான வரித்துறை கூறியிருக்கிறது .