economics

img

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரிப்பு!

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில், நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 8.5% அதிகரித்து, ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. 
2024 நவம்பரில், மத்திய ஜி.எஸ்.டி வசூல் ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி ரூ.91,828 கோடியாகவும், செஸ் ரூ.13,253 கோடியாகவும் உள்ளது.