புதுதில்லி:
‘பனாமா பேப்பர்ஸ்’ மூலம்அடையாளம் காணப்பட்ட கணக்கில் வராத சொத்துக்களின் மதிப்புரூ.20 ஆயிரத்து 078 கோடியாகஉயர்ந்துள்ளது.சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும் சொத்துகள்குறித்த தகவல் தொகுப்புதான் ‘பனாமா ஆவணங்கள்’ (PanamaPapers) ஆகும்.
இதுகுறித்த விவரங்களை பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான ‘மொசாக் ஃபோன்செகா’ (Mossack Fonseca) சுமார்11.5 மில்லியன் ரகசிய ஆவணங்களை ‘பனாமா பேப்பர்ஸ்’என்ற பெயரில் வெளியிட்டது. இந்த ஆவணங்களைத் திரட்டிக் கொடுத்ததில் சர்வதேசபுலனாய்வு பத்திரிகையாளர் களின் கூட்டமைப்பு (ஐசிஐஜே)மற்றும் 100-க்கும் மேலான ஊடக நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அவற் றில், இந்திய அளவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடும் ஒன்றா
கும்.பனாமா பேப்பர்ஸ் குறித்தசெய்திகளை இந்தியாவில் ‘திஇந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு,கடந்த 2016 ஏப்ரலில் வெளியிட்டது.
இதன்படி 2018 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான கணக்கில் வராத ரூ. 1,088 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டன. இது 2019 ஜூன்மாதத்தில் ரூ. 1,564 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் மூலம் 2021 ஜூன் வரையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்ட கணக்கில் காட்டாத சொத்துக்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு மத்திய நேரடி வரிகள்வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அளித்திருக்கும் பதிலில், இதுவரை ரூ. 20,078 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கறுப்புப் பணச்சட்டம் மற்றும் வருமான வரிச்சட்டத்தின் கீழ் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 83 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள வரிகள் வாரியம், குற்றம்நிரூபிக்கப்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை ரூ. 142 கோடிமதிப்பிலான வரி பெறப்பட்டுள் ளதாகவும் தெரிவித்துள்ளது.