புதுதில்லி:
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்திய வங்கிகளின் நிகர வராக் கடன் அளவு 11 சதவிகிதம் வரையில்அதிகரிக்கும் என எஸ்&பி குளோபல்ரேட்டிங்க்ஸ் (Standard and Poor’sGlobal Ratings) அமைப்பு எச்சரித்துள்ளது.கொரோனா பாதிப்புக்குப் பின்பு இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 மாத கடன் சலுகைக்குப் பின்இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை, அவை மிகவும் சிறப்பான நிலையிலேயே உள்ளன. வர்த்தகம், கடன்வசூல் அளவீடுகள் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால்,வாடிக்கையாளர்கள்தான் பலர் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இந்த நிலையைச் சமாளிக்க இந்திய வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் (Non-Banking Financial Company - NBFC)பங்குகளை விற்பனை செய்து அதிகளவிலான நிதியைத் திரட்டி தங்களது நிதி நிலையை மேம்படுத்தியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பல கோடிவாடிக்கையாளர்களுக்கு, கூடுதல் நிதியைக் கொடுத்துத் தொடர்ந்து வர்த்தகத்தில் இருக்கும் வகையில் வங்கிகள் செய்து வருகின்றன.ஆனால், கொரோனா-வுக்கு முன்பு மோசமான நிதிநிலையிலும், அதிக வராக்கடனிலும் இருந்த வங்கிகள் இனிவரும் காலகட்டத்திலும் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர் கொள்ளப் போகிறது என்றும் இந்த மோசமான வங்கிகள் வாயிலாகவே அடுத்த 12 முதல் 18 மாதத்தில் இந் திய வங்கிகளின் நிகர வராக்கடன் அளவு 11 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் எனவும் எஸ்&பி குளோபல்v ரேட்டிங்க்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம், லட்சுமி விலாஸ் வங்கி மீது அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்தது. இது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது.
கட்டுப்பாடுகளை விதித்த அடுத்தசில மணிநேரத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை (LVB), டிபிஎஸ் (DBS)வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுலட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களை சற்று ஆசுவாசப்படுத்தியது.2019-ஆம் ஆண்டில் பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) மற்றும் மும்பைமகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC) வங்கிகளை ரிசர்வ் வங்கிகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, பின்னர் படிப்படியாக 10 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.நிதி நெருக்கடி பல்வேறு மோசடிகள் காரணமாக மிகப்பெரிய சிக்கலில்சிக்கிக்கொண்ட யெஸ் (YES BANK)வங்கிக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இவ்வங்கியில் டெபாசிட் வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமேபணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.தற்போது லட்சுமி விலாஸ் வங்கியும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டு உள்ளது. வராக்கடன் போன்றவற்றின் அதிகரிப்பே வங்கிகளின் இந்த நிலைமைகளுக்கு காரணம்.இந்நிலையில்தான், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்திய வங்கிகளின் நிகர வராக்கடன் அளவு 11 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என எஸ்&பி குளோபல் ரேட்டிங்க்ஸ் (S&PGlobal Ratings) அமைப்பு எச்சரித்துள்ளது.இந்தியாவில் 1947 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் சுமார் 559 தனியார் வங்கிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் பின்பு 1970 முதல் இன்று வரையில் சுமார் 36 தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகமும் இணைந்து (Moratorium) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.