districts

img

மக்கள் விரோத ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் போராட்டம்

செங்கல்பட்டு, ஏப். 3 - பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. வண்டலூரில் கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, செயற்குழு உறுப்பனர்கள் கே.சேஷாத்திரி, வி.தமிழரசி உள்ளிட்டோர் பேசினர். மதுராந்தகம் வட்டம், கொளம்பாக்கம் கிராமத்தில் கிளை செய லாளர் வேல்முருகன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் எரிவாயு சிலி ண்டருக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர், வட்டச் செய லாளர் எஸ்.ராஜா உள்ளிட்டோர் பேசினர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தண்டலம் கிராமத்தில் கிளை செய லாளர் பாக்கியநாதன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் எரிவாயு சிலிண்டரை தூக்கிலிட்டு கிராமத்தின் வீதிகளில் ஊர்வ லமாகச் சென்றனர். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், மது ராந்தகம் வட்டச் செய லாளர் எஸ்.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அர்ஜூன்குமார், விசிக நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். சேனியர்மேடு கிராமத்தில் கிளை செயலாளர் கண்ணியப்பன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அருண் குமார் பேசினார்.

மதுராந்தகம் பேருந்து நிலையம் அரு கில் வட்டக்குழு உறுப்பி னர் நடராஜன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணியும், பழை யனூர் சாலை கிராமத்தில் வட்டக்குழு உறுப்பி னர் வனிதாமணி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வாசுதேவனும், ஒழுப்பாக்கம் கிராமத்தில் கிளை செயலாளர் பரிமளம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்டோரும் பேசினர். திருப்போரூர் வட்டம் சிறுங்குன்றம் கிராமத்தில் கிளை செயலாளர் பொன்னப்பன் தலை மையிலும், கரும்பாக்கம் கிராமத்தில் கிளை செயலாளர் சேகர் தலை மையிலும், செம்பாக்கம் கிராமத்தில் கிளை செய லாளர் விக்னேஷ் தலை மையிலும், தண்டலம் கிராமத்தில் வட்டக்குழு உறுப்பினர் லிங்கன் தலைமையிலும், திருப் போரூர் பேருராட்சி யில் கிளைச் செயலாளர் நந்தா தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இப்போராட்டங்க ளில் இருசக்கர வாகனங்கள், சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வட்டச் செயலாளர் எம்.செல்வம் பேசினார். திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்களம் கிராமத்தில் கிளை செய லாளர் நெல்சன் பால்ராஜ் தலைமையிலும், வடக்குப் பட்டு கிராமத்தில் கிளை செய லாளர் வேணுகோபால் தலைமையிலும், புதுப்பட்டி னம் கிராமத்தில்கிளை செயலாளர் ரபிக் தலைமையிலும் ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.வாசுதேவன், வட்டச் செயலாளர் எம்.குமார், வட்டக்குழு உறுப்பினர் சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.

;