districts

img

குடியாத்தம் ஊராட்சியிலேயே 5 கிராமங்கள் தொடர சிபிஎம் வலியுறுத்தல்

வேலூர். பிப் 17 - குடியாத்தம் ஊராட்சியி லேயே 5 கிராமங்கள் தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவின் விவரம் வரு மாறு:- வேலூர் மாவட்டம், குடி யாத்தம் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம் பாக்கம், பள்ளிக் குப்பம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் பிப்.11ஆம் தேதி மாதனூரில் நடந்த தாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இது வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி யுடன் நடைபெற்றதா? எனத் தெரியவில்லை. மேலும் கூட்டத்தில் பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு இல்லாமல் நடைபெற்றுள்ளது.   இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைத்தால் அந்த பகுதி மக்கள் மாவட்டத் தலைநகருக்கு செல்ல வேண்டும் என்றால் 65 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

இது அப்பகுதி மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வாணியம் பாடி வட்டாட்சியர் அலுவல கங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆம்பூருக்கு போக வேண்டும். ஆனால், தற்போது இந்த இரண்டு அலுவலகங்களும் குடியாத்தத்தில் உள்ளது. இங்கு செல்ல தற்போது தடையாக இருப்பது பாலாறு மட்டுமே. எனவே,சுற்று வட்டார மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அகரம் சேரி - மேல் ஆலத்தூரில் பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க கொடுத்தாலே போது மானதாகும். இத்தோடு மட்டுமின்றி, ஐந்து ஊராட்சிகளை மையப்படுத்தி அகரம் சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அதுவரை மாதனூர் மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள நட வடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அந்த கிராம மக்கள் நலன் கருதி மேற்கண்ட ஐந்து கிராமங்களையும் வேலூர் மாவட்டத்திலேயே தொடர ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமனிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

;