வேலூர், ஜூலை 8- விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை முடிவு வெளியிடப்பட்டது. விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022) பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் (8.7.2022) வெளி யிடப்பட்டுள்ளன. 2022 ஆம் கல்வியாண்டில் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாக 123 மையங்களில் நுழைவுத் தேர்வு (30.6.22 முதல் 6.7.22 வரை) கணினி முறையில் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். விஐடி மாணவர்களை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது மற்றும் சேர்க்கை உறுதி செய்ய அதிகபட்ச வாய்ப்பு களை வழங்குகிறது. சேர்க்கை பெற்ற மாண வர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 2 ஆவது வாரத்தில் தொடங்கும். விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் வரைக்கும் நடைபெறும். ரேங்க் 1 முதல் 1,00,000 வரை எடுத்த மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம், மற்றும் போபாலில் இடம் கிடைக்கும். 1,00,000 க்கும் மேலாக ரேங்க் பெற்ற மாண வர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டும் தான் இடம் கிடைக்கும்.
ஒன்றிய-மாநில கல்வி வாரியம் நடத்தும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவி லான முதலிடம் பெற்றவர்களுக்கு விஐடி யில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 விழுக்காடு படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1000 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும் ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 1 மாணவருக்கும் 1 மாணவிக்கும் விஐடியில் 100 விழுக்காடு கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்கப்படுகிறது.