districts

பாமாயில், துவரம் பருப்பு விலை சற்று குறைவு

விருதுநகர், டிச.,31- விருதுநகர் சந்தையில் பாமாயில், துவ ரம் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. பாசிப்பருப்பின் விலை உயர்ந்துள்ளது.

விருதுநகர் சந்தையில் வாரவாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ. 1360 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.1340-க்கு விற்கப்படுகிறது.

குண்டூர் வத்தல் ஏ.சி விலை 100 கிலோ  கடந்த வாரம் ரூ.20 முதல் 22 ஆயிரம் வரை  விற்கப்பட்டது. இந்த வாரம் சற்று விலை குறைந்துள்ளது. எனவே குவிண்டால் ஒன்று  ரூ.20 முதல் 21 ஆயிரம் வரை விற்பனை யாகிறது.

துவரம் பருப்பு நயம் புதுஸ் லையன் வகையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ. 14,200 என விற்கப்பட்டது. இந்த வாரம்  மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வரை குறைவு  ஏற்பட்டுள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று  ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 5700 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100  குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று  ரூ.5600 என விற்கப்படுகிறது. பிற உணவுப்  பொருட்களின் விலையில் எவ்வித மாற்ற மும் ஏற்படவில்லை.