districts

img

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீவிர பிரச்சாரம்

சாத்தூர், ஏப்.6- விருதுநகர் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டி யிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளர் பா.மாணிக்கம் தாகூரை ஆத ரித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சாத்தூர் பகுதிகளில் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார்.              

சாத்தூர் தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் மேல காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்களிடையே கை சின்னத்தில் வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்தார்.

அப்போது, மாணிக்கம் தாகூர் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட எம்பி நிதியில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செய்துள்ளார். எனவே அனைவரும் மீண்டும் அவரை தேர்வு செய்திட வேண்டும்.      

தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவச பயணம் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. 

தமிழக முதலமைச்சர் இன்னும் ஏராளமான நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து தர உள்ளார். எனவே அனைவரும் கை சின்னத் தில் வாக்களிக்க வேண்டும்’’ என தெரி வித்தார்.

நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.