districts

பட்டாசு கழிவுகள் வெடித்து 2 பேர் பலி

விருதுநகர், ஜன.31- விருதுநகர் அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி புதூரில் சிவகாசியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை பட்டாசு ஆலையில் இருந்த கழிவு  பட்டாசுகளை தொழிலாளர்கள் சிலர் எரித்தனர். அப்போது அதில் கிடந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின . இதில்  பட்டாசு ஆலை தொழிலாளியான சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர்பலத்த தீக்காயம் அடைந்து சம் பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான அம்மன்கோவில்பட்டி புதூரை  சேர்ந்த குபேந்திரன் (28),  சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த தெய்வேந்தி ரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து  தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  

படுகாயமடைந்து உயி ருக்கு போராடிக் கொண்டிருந்த குபேந்திரன், தெய்வேந்திரன் ஆகிய இருவ ரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குபேந்திரன் ஞாயிற்றுக்கிழமை உயிரி ழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.  தெய்வேந்திரன்  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 90 சதவீதம் தீக்கா யம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் போலீ சார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதுதொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான செல்வம் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

;