districts

img

முல்லைப் பெரியாறு அணையில் மண்டல தலைமைப்பொறியாளர் ஆய்வு

தேனி, நவ.29- மதுரை மண்டல தலைமைப்பொறியாளர் ஞான சேக ரன் தலைமையில் நீர் வள  அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.  முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில்,  பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமை யில் மூன்று பேர் கொண்ட ‘கண்காணிப்பு குழுவை” உச்ச நீதிமன்றம் நியமித்தது. தற்போது இந்த குழுவின் தலைவ ராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார்.  இந்நிலையில், வரும் திங்கட்சிழமை (05.12.2022) அன்று  கண்காணிப்புக்குழுவினர் பெரியாறு அணையில்  ஆய்வு செய்ய உள்ளனர்.

இதனை முன்னிட்டு, முன்னேற்  பாடுகள் செய்யவும், பொறியாளர் குழுவிற்கு அறிவுரை வழங்கவும், மதுரை மண்டல தலைமைப்பொறியாளர் ஞானசேகரன் தலைமையில் பெரியாறு அணையில் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். மெயின் அணை,  பேபி அணை, மண் அணை, கேலரி, சட்டர் பகுதிகள்  ஆய்வு செய்த தலைமைப்பொறியாளர் அணைபராமரிப்பு பணிகள், திட்டப்பணிகள், 142அடி நிலை நிறுத்தல் சம்பந்த மாக விவாதிக்கப்பட்டது. மேலும் கேரள அரசின் அனு மதி, கட்டுமானப் பொருட்கள் அணைப்பகுதிக்கு கொண்டு  செல்வதின் சிரமங்களை கேட்டு அறிந்து கடை பிடிக்கவேண்டிய முறைகள் குறித்தும், கண்காணிப்புக் குழுவிடம் முறையிட வேண்டிய விபரங்களை தொகுக்க வும் அணைப் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கி னார்.  ஆய்வின்போது, மதுரை கண்காணிப்புப்பொறியாளர் பழனிச்சாமி, பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் கோமதிநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் குமார்,  மயில்வாகனன், உத விப்பொறியாளர்கள் ராஜகோபால், முரளிதரன், நவீன்குமார் உடனிருந்தனர்.

;