districts

img

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.16- ஒன்றிய அரசின் பட்ஜெட் டில் தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கூடல்நகர் இரண்டாவது ரயில் முனையமாக சாத்தி யமில்லை என்ற கோட்ட மேலா  ளரின் அறிவிப்பு வெளியிடப்  பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரைக் கோட்டத்தில் 1,300 காலிப்  பணியிடங்களை நிரப்பக் கோரியும் டிஆர்இயு, ஏஐஎல்  ஆர்எஸ்ஏ  ஆகிய சங்கங்க ளின் தகவல் பலகையை மற்  றொரு சங்கத்தினர் மறைத்து  அவர்களது தகவல் பலகை யை வைத்துள்ளனர். இதை சட்டத்தின் அடிப்படையில் டிஆர்இயு அணுகி ரயில்வே  கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொட ர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால் டிஆர்இயு-ஏஐஎல்ஆர்எஸ்ஏ தங்களது  உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி புதனன்று மதுரை மேற்கு நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது  ஆர்ப்பாட்டத்தில் பங்  கேற்றவர்கள் கூறுகையில், மதுரையில் ரயில் ஓட்டுநர் கள், உதவி ஓட்டுநர்கள் பணி களை தீர்மானிப்பதில் பெரும் குழப்பம் உள்ளது. ஓட்டுநர், உதவி ஓட்டுநர்களை கண்  காணிப்பதற்கென தனி அதி காரி உள்ளார். ஆனால், மது ரையில் ரயில் ஓட்டுநர் ஒருவர் கண்காணிப்பாளராக உள் ளார். இது ரயில்வே விதி களுக்குப் புறம்பானது. கோட்ட நிர்வாகம் தொழிலா ளர் விரோதப் போக்கு கண்  டிக்கத்தக்கது. குளறுபடி களை சரி செய்ய வேண்டும். அதாவது திருநெல்வேலி யிலிருந்து மதுரைக்கு ரயி லில் பணியாற்றி வரும் ஊழி யர் மதுரையில் இறங்கிக்  கொள்வார். மதுரையிலி ருந்து வேறொரு பணியை மேற்கொள்வது தான் நடை முறை. இப்போது மதுரைக் கோட்டம் புறக்கணிக்கப்படு கிறது. மதுரைக் கோட்டத் தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், திருநெல்வேலியிலி ருந்து - திருச்சிராப்பள்ளி வரை பணியாற்ற வேண்டும். பின்னர் அங்கிருந்து மீண் டும் வேறொரு ரயிலில் பணி யாற்றி மதுரைக்கு வர வேண் டும். இதனால் பணி நேரம்  கூடுகிறது. மதுரையில் வசிக்  கும் ஊழியர்கள் குடும் பத்தை கவனிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். போராட்டத்திற்கு எஸ். ராமர் தலைமை வகித்தார். எம்,ஜீவா, ஆர்.கண்ணன், ஆர்.சரவணன், என்.நெடு மாறன், எம்.சிவக்குமார் உட்  பட ஏராளமானோர் பங் கேற்றனர்.

;