விருதுநகர், ஜூலை 30- விருதுநகர் ரோசல்பட்டி மற்றும் சத்திரரெட்டிய பட்டி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறு வதை தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது. விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும் பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடங்களில் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் ரோசல்பட்டி மற்றும் சத்திரரெட்டியபட்டி பகுதிகளில் நடைபெற்று வந்த பதிவு முகாம்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். பின்பு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.