districts

img

மூலப்பொருள் விலை உயர்வால் “விநாயகர் சிலை” விலையும் அதிகரிப்பு

மதுரை, செப்.10- மூலப்பொருட்களின் விலை உயர்வால் “விநாயகர் சிலை” விலையும் அதிகரித்துள்  ளது. இருப்பினும் “டிமாண்ட்” உள்ளது. இத னால் விளாச்சேரியில் சிலைகள் தயா ரிப்பில் கைவினைஞர்களும், தொழிலா ளர்களும் சுறுசுறுப்பாக உள்ளனர். மதுரை மாவட்டம் விளாச்சேரி கிறிஸ்துமஸ் குடில்கள், கொழு பொம்மை கள் செய்வதற்கும், விநாயகர் சிலைகள்  செய்வதற்கும் புகழ்பெற்றது. இதை நம்பியே கைவினைக் கலைஞர்கள் அவர் களது குடும்பங்கள் மட்டுமல்ல இந்தத் தொழிலை நம்பி தொழிலாளர்களும் உள்ளனர். சுமார் 150 குடும்பங்கள் நேரடியாகப் பொம்மை தயாரிப்பிலும், 100 குடும்பங்கள்  மறைமுகமாக இந்தத் தொழிலிலும் ஈடு பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விளாச்சேரியில் விதவிதமாக விநாயகர் சிலைகள் செய் யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விநா யகர் சிலை தயாரிப்பிற்கான மூலப்பொருட்  கள் உயர்ந்துள்ளதா? போதுமான ஆர்  டர்கள் கிடைத்துள்ளதா? மக்கள் ஆர்வம்  எப்படியுள்ளது என்பது குறித்து விளாச்சேரி யைச் சேர்ந்த மூத்த கைவினைஞரான எம். ராமலிங்கத்திடம் ஞாயிறன்று பேசிய போது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு விநாயகர் சிலைகளுக்கு  “டிமாண்ட்” உள்ளது. ஆனால் மூலப் பொருட்களின் விலை குறைந்தது 20 சத வீதம் உயர்ந்துவிட்டது. இதனால் சிலை களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. 40 கிலோ கொண்ட ஜிப்சம் மூடை கடந்தாண்டு ரு.400-க்கு விற்றது. இப்போது  ரூ.450-க்கு விற்கிறது. சிலை தயாரிக்க  பேப்பர் கழிவுகளும் பயன்படுத்தப்படு கிறது. கடந்தாண்டு பத்து கிலோ ரூ.100-க்கு  விற்றது. இந்தாண்டு ரூ.120-ஆக உயர்ந்து விடடது. இந்தாண்டு இரசாயனம் கலந்த வர்  ணங்களைப் பூசுவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. எனவே நாங்கள் வாட்டர் கலர்களையே பயன்படுத்துகிறோம்.

இது  கடந்தாண்டு லிட்டர் ரூ.300-க்கு விற்றது. இந்தாண்டு ரூ.350-க்கு விற்கிறது.  சிலைகள் தயாரிப்பிற்கான களி மண் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா எனக் கேட்டதற்கு அது ஒன்றும் பிரச்சனை யில்லை. வருவாய்த்துறையினர் சிலை தயாரிப்பாளர்கள் தனித்தனியாக விண் ணப்பித்தால் அனுமதியளிப்பதாகக் கூறி யுள்ளனர். இந்தாண்டு துவரிமான் கண்  மாயிலிருந்தும், விளாச்சேரி கண்மாயி லிருந்தும் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்றார். சிலை தயாரிப்பில் களிமண்ணோடு  யானை சாணமும் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கோவில்களிலிருந்து இலவசமா கப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், வண்டி வாடகையாக ரூ.600 முதல் ரூ. 800 வரை செலவாகிறது. தவிரப் போக்கு வரத்துக் கட்டணமும் அதிகரித்துள்ளது. தொழிலாளர்களுக்கான கூலியும் அதி கரித்துவிட்டது என்றார்.  சரி நீங்கள் என்ன விலைக்கு விற்கி றீர்கள் எனக்கேட்டதற்கு, கடந்தாண்டு ஒரு  அடி விநாயகர் சிலைக்கு ரூ.2,000 பெற்  றோம். இந்தாண்டு ரூ.3,000 பெறுகிறோம் என்று பதிலளித்தார். மற்றொரு கைவினைஞரிடம் பேசிய  போது, விநாயகர் சிலைகள் தயா ரிப்பிற்கான ஆர்டர் ஆடிப் பெருக்கு முதல்  கிடைத்து வருகிறது என்றார். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விலை வாசி உயர்வு, பல்வேறு பொருட்களின் விலை உயர்வு ஏழை-எளிய மக்களை மட்டுமல்ல. அவர்கள் வணங்கும் கட வுளையும் விட்டுவைக்கவில்லை. நமது நிருபர்