விருதுநகர், ஜூன்.,30- தமிழ்நாட்டில் ஊராட்சி களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள்- ஓ.எச்.டி ஆபரேட்டர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண் டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண் டும். தூய்மைக்காவலர் களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு-) ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலை வர் எம்.திருமலை, மாநி லக்குழு உறுப்பினர் எம்.சாராள் மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாநிலச் செய லாளர் எம்.அசோகன், முனிய சாமி, இராமசாமி உட்படப் பலர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை ஆட்சியர் அலுவல கம் முன்பு மாவட்டச் செய லாளர் பொன்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர், எம். சேதுராமு, எஸ்.பி.மண வாளன், எம்.ஆண்டவர், ஆகி யோர் பேசினார்கள். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.அரவிந்தன், பொருளா ளர் ஜி.கௌரி உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். இராமநாதபுரத்தில் ஆட்சி யர் அலுவலகம் முன்பு மாவட்டத்தலைவர் எஸ்.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.அய்யாத்துரை சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர்.குருவேல், மாவட்டத்தலைவர் எஸ்.ஏ. சந்தானம். வாசுதேவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
தேனி
தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பி.ஜெயன், தேனி மாவட்டச் செயலாளர் டி.ஜெய பாண்டி, மாவட்ட பொருளாளர் கே.பழனிவேல், சிஐடியு தேனி மாவட்டத் தலைவர் எம்.ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ஜி.சண்முகம், பிச்சைமணி, ஏ.முருகவேல், ஏசி.காமுத்துரை உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ராமசாமி, மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன், எஸ்.ராணி, முரு கேசன், பரமசிவம், ஏ.தவக் குமார், சிஐடியு மாவட்டச்செய லாளர் கே.பிரபாகரன். உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.