districts

மதுரை முக்கிய செய்திகள்

விவசாயிகள் சங்க  ஒன்றிய பேரவை

இராமேஸ்வரம், செப்.19- இராமநாதபுரம் மாவட்டம் சேத்திடலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய பேரவை கூட்டம் சகாதேவன் தலைமையில் நடை பெற்றது.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.மயில்வாக ணன், மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, செந்தில் குமார்,  எஸ்.ஏ.சந்தனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், ஒன்றியத் தலைவராக பி.சகாதேவன், செயலாளராக ஏ.செந்தில்குமார், பொருளாளராக கே.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்களத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார  நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த  வேண்டும், சேத்திடல், முத்துப்பட்டினம்  மற்றும் சுற்று  பகுதிகளில் விவசாயத்தை நாசப்படுத்தும் காட்டு மாடு கள், பன்றிகள், மான்கள் ஆகிய வன விலங்குகளை கட்டுப்படுத்தி சேதமடைந்த விவசாயத்திற்கு நிவா ரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில்  வலியுறுத்தப்பட்டன. 

அரசப்பபிள்ளைபட்டி  ரயில்வே கிராசிங் பராமரிப்புப் பணிக்காக இன்று மூடல்

ஒட்டன்சத்திரம், செப்.19-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-பழனி செல்லும்  சாலையில் உள்ள அரசப்பபிள்ளைபட்டி ரயில்வே லெவல்  கிராசிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதனன்று ஒரு  நாள் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை  மூடப்படுகிறது. எனவே, திண்டுக்கல், ஒடடன்சத்திரம் மற்றும் பழனி  மார்க்கமாக செல்லும், பேருந்துகள், வேன், கார் இருசக்கர  வாகனங்கள் மற்றும் கனரக லாரிகள் உள்ளிட்ட வாக னங்கள் லெக்கையன்கோட்டையில் இருந்தும் மற்றும் ஒட்டன்சத்திரம் நகரத்திற்குள் வரும் வாகனங்கள் தாரா புரம் சாலை வழியாக புதிய புறவழி நான்கு வழிச்சாலை  வழியை பயன்படுத்தி செல்லுமாறு ஒட்டன்சத்திரம் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கழிவறையை திறக்க  பயணிகள் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம், செப்.19- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலை யத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக நகராட்சி  சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச கழிவறைகள் சரி யான பராமரிப்பு பணி இல்லாமல் பூட்டிய நிலையில் உள்ளது. பயணிகள் வேறு வழியின்றி திறந்த நிலையில் கழி வறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயணி களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலை யிட்டு ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறைகளை திறந்து முறையாக பராமரிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இலவச கல்லீரல்  சிறப்பு சிகிச்சை முகாம் 

திண்டுக்கல், செப்.19- கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட் டல், திண்டுக்கல் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து திண்டுக்கல்லில் இலவச கல்லீரல் சிறப்பு சிகிச்சை  முகாம் ஒய்.எம்.ஆர்.பட்டி மாந  கராட்சி கென்னடி நினைவு  மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் செப்டம்பர் 24 அன்று நடைபெற உள்ளது.  காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் முகாமில் கல்லீரல் ஸ்கேன், ஹெபடைடிஸ் பி மற்றும் சி ரத்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படு கின்றன. ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நாள்பட்ட கல்லிரல் நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் சுருக்கம், கல்லீரலில் கொழுப்பு படிதல், கல்லீரல்  மற்றும் கணைய புற்று நோய், கால்கள் மற்றும் அடிவயிற்  றில் வீக்கம், பாதிப்புகள் என  பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

சவர்மா கடைகளில் ஆய்வு  கெட்டுப்போன இறைச்சிகளை  வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் 

திண்டுக்கல், செப்.19- திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள சவர்மா தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் கெட்டுப்  போன இறைச்சிகளை வைத்திருந்த கடைகளுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது.  நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிர்  இழந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சவர்மா  தயாரிக்கும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை  அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கெட்டுப்போன இறைச்சி களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்து வருகின்ற னர். இந்நிலையில், திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை  அலுவலர் செல்வம் தலைமையில் திண்டுக்கல் ரவுண்ட்  ரோடு பகுதியில் சவர்மா உணவு தயாரிக்கும் உணவ கங்களில் நடத்திய சோதனையில், கெட்டுப்போன 15  கிலோ சிக்கன், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர்  பொடிகள், கெமிக்கல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்  பட்டன. மேலும் உணவு கட்டுப்பாடுகளை மீறி உணவு தயாரித்த 4 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  மதுரை இதேபோல், மதுரை மாநகர் பைபாஸ் சாலை, டவுன்ஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள  உணவகங்களில் நடைபெற்ற ஆய்வில், அனுமதிக் கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்  ணங்கள், மசாலாக்களை சேர்த்த 70 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தேனி இதேபோல், தேனி புதிய பேருந்து நிலையம், பழைய  பேருந்து நிலையம், பாரஸ்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் செயல்பட்டு வரும் ஷர்மா கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பாரஸ்ட் ரோடு பகுதியில் இயங்கும் கடை ஒன்றில் கெட்டுப்போன இறைச்சிகள், கெட்டுப்போன எண்ணெய் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதே  போல புதிய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும்  உணவகம் ஒன்றில் நாள்பட்ட புரோட்டா வைத்திருந்த தும் ஆய்வில் தெரியவந்தது. அவற்றை எல்லாம் கைப் பற்றி குப்பையில் கொட்டப்பட்டது. மேலும் கடை உரிமை யாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில்  சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கம்

மதுரை, செப்.19-  தமிழக சிறைகளில் உள்ள எழுத படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு  எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மதுரை மத்திய சிறையில்  செவ்வாயன்று சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கப் பட்டது. விழாவில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) பரசுராமன், மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தனர்.  பயிற்சியில் மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த 77 சிறை வாசிகளும், பெண்கள் சிறையைச் சார்ந்த 30 சிறைவாசி களும் கல்வி பயில்கின்றனர். ஆறு மாத பயிற்சி முடிவில்  இவர்களுக்கு கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்  கப்படும். கல்வி பயிலும் சிறைவாசிகளுக்கு கற்றல்  கையேடுகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

டெங்கு கொசு புழு கண்டறியப்பட்ட  தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்

மதுரை, செப்.19- மதுரை மாநகராட்சி சார்பில் எதிர்வரும் மழை  காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன்படி செவ்வாயன்று வார்டு எண்.72 பைக்காரா பகுதியில் மாநகர் நகர் அலுவலர் தலைமையில் டெங்கு  தடுப்பு பணியின் போது, உரிய வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாமலும் தேவையற்ற பழைய பொருட் களை சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைத்திருந்த கார ணத்தினாலும், மேலும் டெங்கு கொசு புழு உற்பத்தி கண்ட றியப்பட்ட காரணத்தினாலும் தேவேந்திரன் ஒர்க்ஸாப், சர வண செல்வரத்தினம் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயி ரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

பாலத்தில் மோதிய கார்:  அய்யப்ப பக்தர்கள் காயம்

தேனி, செப்.19- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சவடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (40). இவர் தனது  அண்ணன் லோகநாதரெட்டி (42), அவரது மகன்களான  சுஜித் ரெட்டி (14), ரோகித் (11) மற்றும் கல்யாண்குமார் (44),  பிரகாஷ் (44) ஆகியோருடன் ஒரு காரில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.  சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று விட்டு மீண்டும் தேனி வழியாக சொந்த  ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அனுமந்தன்பட்டி யிலிருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறு பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் கார்  மோதியது. இதில் காரில் வந்த 6 பேர் படுகாயமடைந்த னர்.

நாயக்கர் கால சிலை கண்டெடுப்பு

மதுரை, செப்.19-  மதுரை சிறுதூர் கண்ணனேந்தல் பகு திக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய்  அருகே பழங்கால சிலை ஒன்று கண்டெ டுக்கப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக்  கிடந்த இந்த சிலை கண்ணனேந்தல்  கிராமத்தை சேர்ந்த பொன்பாலகிருஷ் ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ்,  முத்துராமன் ஆகியோர் கண்டெடுத்துள்ள னர். இதையடுத்து வருவாய்த்துறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆட்  சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.  இந்த சிலை குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள  ஆய்வாளர் து.முனீஸ்வரன் கூறுகை யில், ‘‘கண்டறியப்பட்ட சிலை நின்ற கோலத்  தில் தலையில் பெரிய தலைப்பாகை (உரு மால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழி கள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்ச ரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்கா லுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை  ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக் கப்பட்டுள்ளது. இச்சிற்பம் வடிவ அமைப்பை பொருத்து நாயக்கர் காலத்தை  சேர்ந்தவையான இருக்கலாம் எனக் கரு தப்படுகிறது. இந்த சிலை குறித்து முழுமை யான ஆய்வு செய்த பின்னர் முழு தக வல்கள் பெற முடியும்’’ என்றார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

இராமேஸ்வரம், செப்.19-  கச்சத்தீவு-நெடுந்தீவுக்கிடையே மீன் பிடித்த இராமேஸ்வரம் மீனவர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு  இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.  ராமேசுவரம் மீனவர்களை கைது செய்த  இலங்கை கடற்படையை கண்டித்தும், மீன வர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் 3 கோடி வரை மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.  இந்நிலையில், திங்களன்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதி காரிகளிடம் அனுமதி பெற்று 250-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில், நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மூன்று ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிதனர்.  ஆனால் சில மீனவர்கள் இலங்கை  கடற்படையை அச்சுறுத்தும் விதமாக  படகுகளை செலுத்தியதால் கடற்படை யினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அச்சமடைந்து மீன வர்கள் படகுகளை கரைக்கு திரும்பினர்.  ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற  நிலையில் குறைந்தளவே மீன்கள் பிடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை கரைக்கு திரும்பினர். இதனால் பல ஆயி ரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன வர்கள் கவலை தெரிவித்தனர்.

நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி
விசாரணை அதிகாரிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை

மதுரை, செப். 19-  மதுரையை தலைமை யிடமாக கொண்டு செயல்  பட்டு வந்த நியோமேக்ஸ் என்ற பிரபல நிதி நிறுவனம்  மூலம் பல்வேறு பெயர்களில் 20-க்கும் மேற்பட்ட கிளை நிறு வனங்களை தமிழகம் முழு வதும் உருவாக்கி பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பல  ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நெல்லை, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், இராம நாதபுரம் உள்ளிட்ட கிளை களை நிர்வகித்து வந்த 17  நிர்வாகிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சைமன் ராஜா,  கபில், பத்மநாபன் ஆகிய 5  நபருக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை கவுதமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ஒரு கோடி ரூபாய் நியோ மேக்ஸ் சில் முதலீடு செய் தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக் கில் நிலம் வாங்கி வைத்து உள்ளோம். ஒன்றிய அரசின் பெரிய திட்டங்கள் வர உள்  ளது. எனவே, இதில் இணைந்து  அதிக லாபம் பெறலாம். என  ஆசைவார்த்தை கூறினர். ஆனால் கூறியபடி பணமோ, நிலமோ ஒதுங்க வில்லை. இவர்கள் முத லீட்டாளர்களின் பணத்தை  கல்லூரிகள், வெளிநாடு களில் முதலீடு செய்து உள்ள னர். பல ஆயிரம் கோடி ரூபாய்  மோசடி நடந்து உள்ளது. தற்  போது மதுரை பொருளா தார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்டவர் களோடு, இந்த வழக்கை  விசாரிக்கும் விசாரணை அதி காரிகள் சிலர், உறுதுணை யாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்  வதில், கால தாமதமாகிறது.  எனவே, பாதிக்கப்பட்டவர் களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என  கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்  தது. அப்போது, மனுதாரர் தரப்பு, ‘‘முக்கிய குற்றவாளி களை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்  யப்பட்டவர்களில் சிலர் ஜாமீ னில் வெளி வந்து உள்ளனர்.  பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பானது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசா ரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றனர். அரசு தரப்பில் ஆஜரான  குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், முக்கிய மான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திங்களன்று 2 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம். இது வரை 5000 சொத்து ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன. புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டு உள்ளார். உரிய முடிவு எட்டப்படும்’’ என்றார். இதை தொடர்ந்து நீதி பதி, குற்றம் சாட்டப்பட்ட வர்களை விரைவாக கைது  செய்ய வேண்டும், தேவைப்  பட்டால் இந்த வழக்கை விசா ரிக்கும் பொருளாதார குற்  றப்பிரிவு, விசாரணை அதி காரிகள் தொலைபேசி தொடர்புகள் சோதனை செய்ய நேரிடும் என எச்ச ரிக்கை விடுத்தார். மேலும் வழக்கில் பிர தான குற்றவாளிகளை இது வரை ஏன் கைது செய்ய வில்லை என கேள்வி எழுப்  பிய நீதிபதி, உரிய நடவடிக்கை  எடுத்து பதில் மனு தாக்கல்  செய்ய வேண்டும் இல்லை யேல், சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும்? என கூறி  வழக்கு விசாரணையை செப் டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.