districts

img

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ.211 கோடி மதிப்பிலான சிகிச்சைகள்

தூத்துக்குடி, செப். 27  தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,31,463 பேர் ரூ.211 கோடி மதிப்பிலான சிகிச்சைகளை பெற்று  பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த 4 ஆம் ஆண்டு தினவிழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையேற்று சிறப்புரை ஆற்றி, இத்திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு நினைவு பரிசினையும் காப்பீட்டு திட்ட அட்டைக்கு பதிவு செய்த பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை களையும் மேலும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனை ஒருங்கிணைப்பா ளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை தமிழ் நாட்டில் 1.19 கோடி பேர் 10835 கோடி மதிப்பி லான சிகிச்சைகளை பெற்று பயன டைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 1,31,463 பேர் 211 கோடி மதிப்பிலான சிகிச்சை களை பெற்று பயனடைந்துள்ளனர்.

இத் திடத்தில் 1513 சிகிச்சை முறைகள் அங்கீ கரிக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும் 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 937 தனி யார் மருத்துவமனைகளும் 796 அரசு மருத்துவமனைகளும் என மொத்தம் 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 தனி யார் மருத்துவமனைகளும், 10 அரசு மருத்துவமனைகளும் என மொத்தம் 22 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள் ளன. மேலும் மாவட்டத்தில் இதுவரை 3,11,614 பேர் காப்பீட்டு திட்ட அட்டைகளு க்கு பதிவு செய்துள்ளனர். மேலும், புதிய காப்பீட்டு திட்ட அட்டைகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீட்டு திட்ட அட்டை பதிவு மையத்தை அணுகி கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு வருமானம் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் சமர்ப் பித்து புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியருடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், பொன் இசக்கி இணை இயக்குநர் (சுகாதாரம்) தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி முதல் வர் கலைவாணி, மதுரம் பிரைட்டன், பெரியசாமி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளின் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் தா.பாண்டியராஜன் மற்றும் புலனாய்வு அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;