திண்டுக்கல், செப்.21- திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரி யில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடை பெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் 2,039 குழந்தைகள் மையங்கள் செயல்படு கின்றன. பள்ளிக் கல்லூரிகளில் பயிலும் வளர் இளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன. ரத்தச் சோகை, ரத்த சிவப்பணுக்கள் குறைபாடு, இத னால் உடல் சோர்வு மனச் சோர்வு ஏற்படு கின்றன. அப்படிப்பட்ட வளர் இளம் பரு வத்தினர் பாரம்பரிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக இந்த உணவுத் திருவிழா திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கொடி, ஜி.டி.என். கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.