“நட்டதை எல்லாம் பன்றிகள் தின்று அழிக் கும். குரங்குகள் பலாப்பழம், தேங்காய் பறிக்கும். இனி விவசாயம் செய்து வாழ முடியாதுன்னு நினைக்கிறேன்”-- பத்தனம் திட்டா மக்களவைத் தொகுதி எல்.டி.எப் வேட்பா ளர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக்கின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒரு விவசாயியின் குமுறல் இது. “பன்றிகளை தொல்லை தரும் விலங்காக அறிவிக்க வேண்டும். அப்போது உங்கள் பயிர் களை அழிக்க வரும் பன்றியைக் கொல்லலாம். மற்ற விலங்குகள் வராமல் இருக்க தொங்கும் வேலி போன்ற வழிகளைப் பார்ப்போம். நான் மக்களவைக்குப் போனால், முதலில் என் தொகு திக்கு அதைச் செய்யலாம்...”- இது பத்தம் திட்டை எல்டிஎப் வேட்பாளர் தாமஸ் ஐசக்கின் பதில். “வனவிலங்குகள் காடுகளில் வசதியாக வாழ வேண்டும். நாட்டில் விவசாயம் செய்து அச்சமின்றி மக்கள் வாழ வேண்டும். இதற்காக மத்திய வன-சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் முன்னணியில் இருப்பேன்”- என ஒரு வேட்பாள ராக தனது கொள்கையை தெளிவுபடுத்தினார். பதினைந்து ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தவர் எதுவும் செய்யாத தொகுதியில், மாற்றக் காற்றாக வருகிறார் டி.எம்.தாமஸ் ஐசக். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு தொகுதி முழுவதும் நடத்தப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி பத்தனம்திட்டாவின் சிறப்பம்சமாகும். ஒரு பகுதி மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூற வந்தனர். மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றிய கிப்பியின் மாவீரன் முன் தீர்க்க முடியாத பிரச்சனையே இல்லை. இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் முடிந்த தும் தொகுதியை நன்கு அறிந்த வேட்பாளர் என்ற பெயரை ஐசக் வென்றுள்ளார். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட பிரச்சனை களுக்கு தீர்வு உறுதி செய்யப்பட்டதால் வர வேற்பு மையங்களுக்கு அதிகமானோர் வரு கின்றனர். “மறுபடியும் ஓய்வூதியம் கிடைக்காதா...” என, பத்தனம்திட்டை நகரத்தில் சுற்றுப்பய ணத்தின் போது, முதியவர் ஒருவர் கவ லைப்பட்டார். வேட்பாளர், ‘ஓய்வூதியம் பெறு வதை நிறுத்தப் போவதில்லை, ஓய்வூதியத்தை அதிகரிக்கப் போகிறோம்’ என்றார். நாங்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமா? என்றார் மற்றொருவர். உடனடியாக ஐசக்கிட மிருந்து வந்த பதில் ‘யார் சொன்னது?. குடி யுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல் படுத்தப்படாது என்று முதல்வர் வாக்குறுதி அளிக்கவில்லையா?.’ “அறிவியல் பத்தனம் திட்டை வேலை உறுதி” திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஒருவர் கூட வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியபோது மக்கள் நம்பினர். ஏற்க னவே 10,000 பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்த திட்டத்திற்கு தாமஸ் ஐசக் தலைமை ஏற்றி ருந்தார் என்பதே நம்பிக்கைக்கு காரணம். இப்போது பல யுடிஎப் தலைவர்கள் எல்.டி.எப்.க்கு வேலை செய்ய முடிவு செய்துள்ளனர். புத்தகங்களைப் பெற ஏற்பாடு பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய பத்தனம் திட்டா மக்களவைத் தொகுதியின் ஒவ்வொரு தொகுதியும் ஐசக்கின் சமூக வலைதளப் பக்கத் தில் பரபரப்பான தலைப்பு. “மகிழ்ச்சி என்பது பூக்கள் அல்லது புத்தகங்களைப் பெறுவது” என்று ஐசக் முதலில் கூறினார். பின்னர் வேட்பா ளரின் சுற்றுப்பயணம் முழுவதும் மலர்களா லும் புத்தகங்களாலும் நிரம்பி வழிந்தது. இவை நூலகங்களுக்கு வழங்கப்படும் என வேட்பா ளர் தெரிவித்தார். பிரச்சாரத்தில் ஐசக்கின் புத்த கங்களுடன் புத்தக வண்டியும் உள்ளது.