districts

img

தொடருகிறது காத்திருப்புப் போராட்டம்

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றுவரும் காத்திருப்புப் போராட்டம் திங்களன்று 35-ஆவது நாளாக நீடிக்கிறது. மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், ஸ்டாலின் குமார், மொக்கமாயன், ராம்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில நிர்வாகி விஜயமுருகன், மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீரணன், பன்னீர்செல்வம் ,வெள்ளலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பா.ராஜா, விவசாயத் தொழிலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி கார்த்திக் சந்திரகுமார், வெற்றிவேல் பிச்சைமணி, உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.