மதுரை,டிச.7- பெஞ்சால் புயலுக்காக ஒன்றிய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்த ரூ. 944.80 கோடி ஜூன் மாதமே மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலி ருந்து வழக்கமாக ஒதுக்க வேண்டிய நிதிதான் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித் துள்ளார்.
தமிழ்நாட்டில் பெஞ்சால் புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திரு வண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்கள் பாதிக் கப்பட்டன.
இந்த புயல் பாதிப்புக்காக தமிழ் நாடு அரசுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலை யில், பெஞ்சல் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ. ரூ.944.80 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக செய்தி வெளியா னது.
இந்நிலையில், ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறித்து தமிழக நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு மது ரையில் செய்தியாளர்களிடம் கூறு கையில், பெஞ்சால் புயல் நிவார ணத்துக்காக ஒன்றிய அரசு இன்னும் நிதிஒதுக்கீடு செய்யவில்லை. ஒன்றிய அரசு சமீபத்தில் தமிழ்நாட்டு க்கு ஒதுக்கீடு செய்த ரூ. 944.80 கோடி ஜூன் மாதமே மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழக்க மாக ஒதுக்க வேண்டிய நிதிதான். அந்த நிதியை தாமதமாக ஒன்றிய அரசு தற்போது வழங்கியுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை யை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதே போல தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த சேதத்துக் காக தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.37,906 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் ரூ. 276 கோடிதான், அதாவது நாம் கேட்டதில் 1 சதவீத நிதியைத்தான் ஒதுக்கியது” என்று தெரிவித்துள் ளார்.