சிவகாசி, மே 28- சிவகாசியில் போக்குவரத்திற்கு இடை யூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள முக்கியச் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும், மாடுகளால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் சுட்டிக் காட்டினர். மேலும், மாடுகளை அப்புறப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேயர் சங்கீதா இன்பம், உடனடியாக மாடுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், சாலையில் சுற்றித் திரி யும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் உடனே தங்களது இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென முன் கூட்டியே மாநக ராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. அதன் பிறகு, ஒரு சிலர் மட்டுமே தங்க ளது மாடுகளை சொந்த இடங்களுக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதும், ஏராளமான மாடுகள் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தி வந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், மாநகராட்சி அலுவல கத்திற்கு புகார் தெரிவித்தனர். இந்நிலை யில் சிவகாசி தெற்கு தெரு அருகே போக்கு வரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 3 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்த னர். பின்பு, அவற்றை பாதுகாப்பாக திரு நெல்வேலி மாவட்டம் ஊத்துமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்த னர்.