தென்காசி, ஜூலை 17- தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகு தியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்தில் வாஞ்சிநாதன் அவர்களின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திரு உருவ சிலைக்கு ஞாயிற் றுக்கிழமையன்று மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் வரு வாய் கோட்டாட்சியர் கெங் காதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் பார் கவி, செங்கோட்டை வட் டாட்சியர் கந்தசாமி, வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் உள்ளனர்.