districts

img

தைக்கால் தெரு பொதுஜன படிப்பகத்தில் தோழர்களுடன் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு

மதுரை, செப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மத்திய - 2  ஆம் பகுதிகுழு சிம்மக்கல் தைக்  கால் தெருவில் உள்ள பொதுஜன படிப்பகத்தில் செப்டம்பர் 9 வெள்ளி யன்று மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தோழர்களை சந்தித்து கலந்துரையாடினார். தோழர்களிடம் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், மதுரை  கட்சி பாரம்பரியமிக்க மாவட்டம். எனவே இங்குள்ள மக்கள் பிரதி நிதிகளை முன்வைத்து கட்சியை  வலுப்படுத்துவதற்கான ஏற்பாடு களை நாம் செய்திட வேண்டும்.   கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் கூட பாலகர் சங்கம் அமைப்ப தற்கான ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள். இதன்மூலம் குழந்தை கள் மத்தியில் நல்ல கருத்துக்களை யும் நல்ல நோக்கங்களையும் கொண்டு செல்வதற்கு அவை பெரும் முயற்சியாக இருக்கும். அந்த அடிப்படையில் நாம் தமிழகத்தில்  பாலகர் சங்கங்கள் அமைப்பது, பாலகர் பூங்காக்கள் அமைப்பது, அதன் மூலம் சிறுவர்களை நல்ல  சித்தாந்த அடிப்படையில் கொண்டு  செல்வதற்கு வருங்காலத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல எதிர் காலத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரும் பயனாக இருக்கும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் குடும்ப சூழ்நிலை யை புரிந்து வளருவதற்கும் பால கர் சங்க பயிற்சி முகாம்கள் மிகப்  பெரும் பணியினை செய்திட வேண்  டும்.  மதுரை மாநகரில் பல்வேறு  அணி திரட்டப்படாத தொழிலா ளர்கள் இருக்கின்றார்கள். அவர்  களை எல்லாம் நாம் ஒன்றிணைத்து அணிதிரட்ட வேண்டும். இன் றைக்கு உள்ள  நெருக்கடியான சூழ்நிலை மக்களை போராடத் தூண்டுகிறது. எனவே அவர்களை அணிதிரட்ட வேண்டும். 

கருத்துக்களை மக்களிடம் சொல்ல தீக்கதிர் விற்பனையை அதிகப்படுத்துக!
தீக்கதிர் பத்திரிகையை திருப்  பூர் மாவட்டத்தைப் போல் அதிக ளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்  டத்தில் ஒரு கட்சிக் கிளை 100  பத்திரிகைகளுக்கு மேல் வாங்கி  விற்பனை செய்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தீக்கதிர் மக்க ளுக்கு சென்றடைகின்றது. குறைந்த பட்சம் அங்கு நான்கு வீடுகளுக்கு ஒரு தீக்கதிர் நாளிதழ் வாங்கக் கூடிய சூழ்நிலையை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். அந்த அடிப்ப டையில் மக்கள் மத்தியில் தீக்கதிர் பத்திரிகையை கொண்டு செல்வ தற்கும் பெரும் முயற்சியை மேற் கொள்ள வேண்டும். ஏனென்றால் தீக்கதிர் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டால்தான் நம்முடைய கருத்துக்களை அவர்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று தோழர்களிடம் தெரிவித்தார்.  கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நர சிம்மன், பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா மற்றும் பகுதிக்குழு உறுப்  பினர்கள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

;