districts

மதுரை முக்கிய செய்திகள்

சிவகங்கையில் இன்று கடையடைப்பு, ரயில் மறியல் 

சிவகங்கை, செப்.22-  சென்னையிலிருந்து காரைக்குடி வரை இயங்கு கின்ற பல்லவன் விரைவு ரயிலை சிவகங்கை, மானா மதுரை வரை நீடிக்க வேண்டும், 8 ரயில்களை சிவகங்கை யில் நிறுத்தி செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் அனைத்துக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம், கடையடைப்பு சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.  இந்நிலையில், போராட்டத்தை விளக்கி கடைகள், வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் அளிக்கும் இயக்கம் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்டக் குழு உறுப்பினர் விஷ்வநாதன், ஒன்றி யச் செயலாளர் உலகநாதன், சிபிஐ நகர் செயலாளர் மருது, திக மாவட்டச் செயலாளர் புகழேந்தி, ஆம் ஆத்மி மாவட்டச் செயலாளர் பெரியார் ராமு, விசிக மாவட்டப் பொறுப்பாளர் முத்துராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மணல் திருட்டுக்கு உடந்தை? 3 காவலர்கள் இடமாற்றம்

கடமலைக்குண்டு, செப்.22- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல்நிலை யத்தில் பணிபுரியும் காவலர்கள் சிலர் மணல் திருட்டுக்கு  ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்டோங்கரே விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், சார்பு ஆய்வாளர் ஏ.வரதராஜன், தலைமைக் காவலர் ஏ.பூரணசந்திரன், முதல்நிலை காவ லர் எம்.மணிகண்டபிரபு ஆகியோரை இடமாற்றம் செய்ய  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மூவரையும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தர விட்டார்.

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர், செப்.22- சிவகாசி அருகே உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்தவர் சுதன் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18  வயது நிறைவடையாத சிறுமியை, மாரிச்சாமி என்பவர் உதவியுடன் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்தனர். இந்த வழக்கானது திருவில்லிபுத்தூர் விரைவு மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதி பதி, சுதன், மாரிச்சாமி ஆகியோருக்கு தலா 20 ஆண்டு  சிறை தண்டனை, ரூ.32ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித் தார். 

மாடியிலிருந்து குதித்த  பள்ளி மாணவியின் கால் முறிவு

தேனி, செப்.22-  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொத்தப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி ஆண்டி பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு  படித்து வருகிறார்.  இந்நிலையில் வியாழனன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவி, மதிய உணவு இடை வேளையின்போது, 3-வது மாடிக்கு சென்று, அங்குள்ள  பக்கவாட்டு சுவரில் ஏறி திடீரென கீழே குதித்தார். பள்ளி  கட்டிடத்தின் அருகில் மரங்கள் சூழ்ந்து இருந்ததால் மாணவி மரக்கிளையில் சிக்கி கீழே விழுந்தார். இதில், மாணவியின் வலது கால் எலும்பு முறிந்தது.  இதனையடுத்து அவரை உடனடியாக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அங்கி ருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர்‌ மாணவி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

மின்னல் தாக்கியதில் தரைமட்டமான  பட்டாசு தயாரிக்கும் அறை

சிவகாசி, செப்.22- சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தில் செல்வராஜ்  என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு, வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்தநிலையில், திடீரென அப்பகுதியில் இடி, மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. அப்பாது பட்டாசு தயா ரிக்கும் பணியிலிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறினர். அப்போது, ஆலை வளாகத்தில் ராக்கெட்  வெடி தயாரிக்கும் அறையில் இடி மின்னல் தாக்கிய தில் தீ விபத்து ஏற்பட்டது.  தகவலறிந்த விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள்  தீயை அணைத்தனர். சம்பவ இடத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரத்தில் இரண்டு நாள்  குடிநீர் விநியோகம் நிறுத்தம் 

இராமநாதபுரம், செப்.22- இராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொகுதி -3ல் சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயல் அருகில் 1100 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செப்டம்பர் 23, 24 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

போலீசுக்கு தகவல் தெரிவித்தவரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது

திருச்சுழி, செப்.22- திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளத்தைச் சேர்ந்த  கஜேந்திரன் மகன் மணிகண் டன் (37). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் அப்பகு தியில் நடக்கக்கூடிய மணல் திருட்டு, கஞ்சா விற்பனை, அரசு அனுமதியின்றி மது  விற்பனை போன்ற குற்றச் சம்பவங்கள் குறித்து அவ்வப் போது காவல்துறைக்கு மறை முகமாக தகவல் சொல்லி வந்துள்ளார். இதனால், சிலருக்கு மணிகண்டன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.  இந்நிலையில், செப்டம்பர் 18 அன்று வயல் பகுதியில் மணிகண்டன் தலைப் பகுதி சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருச்சுழி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது.  இதில், நல்லாங்குளத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்து ராமலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தியதில், கொ லை செய்யப்பட்ட மணிகண் டன் அவ்வப்போது முத்துராம லிங்கம் செய்யும் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தியதா கவும், மணிகண்டனை தீர்த்துக் கட்ட முடிவு செய்ததா கவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டனை கொலை செய்ய உடந்தையாக இருந்த நல்லாங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (25), அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் ஆகிய இரு வரும் இராமசாமிபட்டி பகுதி யில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதை யடுத்து, தனிப்படை காவல் துறையினர் அவர்களை பிடித்தனர். பின்னர் பரளச்சி காவல் நிலையத்திற்கு அழை த்து வந்து மூவர் மீதும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்த னர். மேலும் கொலையில் சம் பந்தப்பட்ட லிங்கா என்பவரை தேடி வருகின்றனர். 

பழனி முருகன் கோவிலுக்கு  கைபேசி கொண்டு செல்ல தடை

பழனி, செப்.22- பழனி தண்டாயுதபாணி கோவி லுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக செயல்அலுவ லர் செ.மாரிமுத்து கூறுகையில், ‘‘பழனி தண்டாயுதபாணி கோவி லுக்கு வரும் பக்தர்கள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கைபேசி, புகைப் படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் தவறி கொண்டு வருப வர்கள் தங்கள் கைபேசி, புகைப் படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாத னங்களை கோவில் நிலையங்க ளில் நுழைவாயில்களான படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப் கார் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்துவிட்டு, தரி சனம் முடிந்த பின்னர் பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறியுள்ளார்.

இராமேஸ்வரத்திற்கு ஆட்டோ பர்மிட் கூடாது  ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், செப்.22- போக்குவரத்து நெருக்க டியில் திணறும் இராமேஸ் வரம் தீவிற்கு புதிய ஆட்டோ  பர்மிட் வழங்கக் கூடாது என வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கம், அனைத்து ஆட்டோ சங்கங்கள் இணை ந்து இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.பி.செந்தில் தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்டத் துணைச் செய லாளர் எம்,கருணாமூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் தலைவர் டி.இராமச்சந்திர பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழி லாளிகள் பங்கேற்றனர்.