districts

img

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

நாகர்கோவில், நவ.30- பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லை களை டதி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நவம்பர் 30 செவ்வாயன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் 25  பாலி யல் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு 15 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரு கிறது. உலகளவில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டி ருக்கிறது. அதற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் வெளியி டப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளில் சட்ட உதவி கள், சட்ட ரீதியான விழிப்புணர்வு,  முதியோர்க்கான நலத்திட்டங் கள் குறித்த தகவல்கள், மனநல ஆலோசனை, பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தக வல்கள் பெண்கள் உதவி எண்.181, குழந்தைகள் உதவி எண்.1098, கல்வி உதவி வழி காட்டி மையம் 14417, முதியோர்  வழிகாட்டி உதவி எண்.14567 (Toll Free Number) களை தொடர்பு கொள்ளலாம். அளிக்கப்படும் தகவல் இரகசியம் காக்கப்படும். மேலும், குழந்தைகளுக்கு வன்கொடுமை ஏற்பட்டால் பள்ளிகளின் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நாகர்கோவில்  மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் இரா.சரோஜினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.அ. புகழேந்தி, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் ஜெய  பிரகாஷ், டதி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையா சிரியர் நிர்மலா சாந்தகுமாரி, சைல்டுலைன் கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் டி.கேத்ரின் மேரி, ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

;