districts

img

ஆக்கிரமிப்புகள், கொட்டப்படும் கழிவுகளால் சீரழிந்து கிடக்கும் செல்லூர் கண்மாய்

மதுரை, ஆக.6-  முறையான பராமரிப்பின்றி, ஆக்கிரமிப்புகள், கொட்டப்படும் கழிவுகளால் சீரழிந்துகிடக்கிறது செல்லூர் கண்மாய்.  1993 ஆண்டு வரை இந்த கண்மா யில் நீர் நிரம்பி காணப்பட்டது.  1993  நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத் தால் கண்மாய் உடைந்து, கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளா னதால் நீர் போவதற்கு வேறு வழி  இன்றி செல்லூர் முழுவதும் வெள்  ளம் பெருக்கு ஏற்பட்டது  2005 ஆண்  டும் ஏற்பட்ட  மழை வெள்ளத்தால் கைத்தறித் தொழில் செல்லூர் பகுதி யில் பெரும் பாதிப்பிற்கு உள்ளா னது. 2005 ஆம் ஆண்டு வரை இந்த  கண்மாயில் நீர் வரத்து ஓரளவு பரா மரிக்கப்பட்டு வந்ததால் நீர் நிறைந்தே காணப்பட்டது. ஆனால் அதன் பிறகு கண்மாய் வரும் நீர் வரத்து கால்வாய்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கபளீகரம் செய்யப்பட்டது, செல்லூர், மீனாம்  பாள்புரம், கைலாசபுரம் உள்பட கண்  மாயை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் அளவுக்கு  நீர் ஆதாரமாய் இருந்து வருகிறது. ஆனால் தற்போது கண்  மாயின் கரையினை ஒட்டிய பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

ஏறக்குறைய 210 ஏக்கரில் இருந்த கண்மாயின் பரப்பளவு, இன்று சுருங்கி வெறும் 94 ஏக்கர் என்ற பரி தாப நிலையில் உள்ளது. 94 ஏக்கர்  கண்மாயினை பாதுகாக்க வேண்  டும். அதில் உள்ள ஆகாய தாமரை களை அகற்றி,  கண்மாயினை ஆழப் படுத்த வேண்டும், கழிவு நீர் கலப் பதை தடுக்க வேண்டும் என்று கோரி பொதுப்பணித்துறையிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் செல்லூர்  கண்மாய் பாதுகாப்புகுழு சார்பில்  தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. தற்காலிக சாலையை பயன் படுத்தி பலர் ஆக்கிரமிப்பு இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு - 2 பகுதிகுழு செயலா ளர் ஏ. பாலு கூறுகையில், செல்லூர் கண்மாயின் ஒரு பகுதியான ஆபி ஸர்ஸ் டவுன் பகுதி ஒரு காலத்தில் விளைநிலமாக இருந்தது. தண்ணீர் வரத்து கண்மாயில் இல்லாத கார ணத்தாலும் நகரில் விரிவாக்கம் கார ணமாகவும் வீடுகளாக மாறியது.  இதை பயன்படுத்தி  சில ஆக்கிரமிப் பாளர்கள் கண்மாயில் வடக்கு பகுதி யில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்  களை கட்டியுள்ளார்கள்.

பாதாள சாக்கடை இணைப்புகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பலர் கழிவு நீரை கண்மாய் பகுதிக்கு குழாய்கள் மூலம் திருப்பி விட்டுள் ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாம்பாள்புரம் பகுதியில் இருந்து ஆபிஸர் டவுன் இணைக் கும் பகுதியில் கண்மாய் கரையில் சாலை அமைப்பதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்த போது இது ஆக்கிர மிப்பை அதிகப்படுத்தி விடும் என்று  கூறி சாலை இப்பகுதியில் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினோம். ஆனால் தற்காலிக சாலையை பலர் பயன் படுத்தி கரை பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இதனால்  சில கம்பெனிகள் இப்பகுதியில் உரிய  இட அனுமதி இன்றி செயல்பட்டு வரு கிறது. இதனால் கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வழிப் பாதை என்பது குப்பைகளால் ஆக்கிரமிப்பு செய் யப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி கண்மாய் கரை ஓரத்தில் குப்பை மேடுகளும் உருவாகி வருகின்றது.  தொடர்ந்து பொதுப்பணித்துறை அதி காரிகளிடம் இதுகுறித்து கூறி வரு கின்றோம். மேலும் கண்மாயினை பாதுகாத்திட ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்  ஆனால் அதி காரிகள் செவி கொடுத்து கேட்டும் அதை செயல்படுத்தாத நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

;