districts

img

கருங்குளம் அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி நுழைவு விழா

கட்டப்பனை, ஜூன் 7- இடுக்கி மாவட்டம் கட்டப்பனை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கருங்குளம் அரசு ஆரம்பப்பள்ளியில் 2023ஆம் ஆண்டு பள்ளி  நுழைவு விழா நடைபெற்றது. அய்யப்பன்  கோவில் பஞ்சாயத்துத் தலைவர்  ஜெய மோள் விழாவைத் துவக்கிவைத்தார். பெற்றோர் -ஆசிரியர் கழகச் செயலா ளர் சஜி தலைமையில் நடைபெற்ற விழா வில் தலைமை ஆசிரியர் பி.பாண்டு ரெங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். கட்டப்பனை ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியாவின் கிளை மேலாளர் அஜய்  கலந்துகொண்டு பள்ளிக் குழந்தை களுக்கு குடை, ஸ்கூல் பேக், மாஸ்க் ஆகி யவற்றை வழங்கினார். சப்பாத்து வார்டு உறுப்பினர் வர்கீஸ், கருங்குளம் வார்டு உறுப்பினர் பினு, கட்டப்பனை பிளாக் பஞ்சாயத்து உறுப்பினர் சவீதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  ஆசிரியை  சூரியா நன்றி கூறினார்.