districts

பழனி முருகன் கோவில் கும்பாபிசேகம் குறித்து சங்பரிவாரங்கள் அவதூறு

திண்டுக்கல், பிப்.2- பழனி முருகன் கோவில் கும்பாபிசேகம் குறித்து சங்பரிவாரம்  அவதூறு பிரச்சாரம் செய்  வதற்கு  கண்டனம் எழுந்துள்ளது.  பழனியில் உள்ள முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி  27 ஆம் தேதி கும்பாபிசேகம் நடைபெற்றது.  சீரும் சிறப்போடு. ஹெலிக்காப்டரில் இருந்து  பூக்கள் தூவிய அந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி குறித்து முருக பக்தர்கள் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசையும் அறநிலையத்துறை அமைச்  சர் மற்றும் அதிகாரிகளை  வெகுவாக பாராட்டு கிறார்கள்.  இந்நிலையில் பாஜக ஆர்.எஸ்.எஸ்.  சங்பரிவார் குழுவினர் தற்போது அவதூறு களை பரப்பத் தொடங்கியுள்ளனர். கும்பாபி சேகத்திற்கு முதல் நாள் மூலவர் முருகன்  சிலை உள்ள கருவறைக்குள் ஆகம விதி களை மீறி சிலர் சென்றதாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புகிறார்கள். நவ பாசான சிலையை பாதுகாக்கும் குழு என்ற  அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி  பொங்கிலி யப்பன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்  பல அடிகளார்,  கோவை சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம், மருதாச்சல அடிகளார்,  இந்து  சமய அறநிலையத்துறை ஸ்தபதி தட்சிணா மூர்த்தி,  

கோவில் குருக்கள் கும்பேஸ்வரர்,  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி,  பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்  தில்குமார், நகர்மன்றத்தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட  15 பேர் உள்ளனர். இந்த  சிலை பாதுகாப்பு குழுவை சேராத சிலர் மூலவர் கருவறைக்குள் கும்பாபிசேகத்திற்கு முதல் நாள் சென்றதாக கூறியும்,  பக்தர்கள் வாக்கு வாதம் செய்வது போலவும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.  இந்த பிரச்சனை தொடர்பாக ஆட்சியர் விசாகன் மற்றும் கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்வது போல வும் கோவில் அர்ச்சகர் ஒருவரிடம் வாக்கு வாதம் செய்வது போலவும் வீடியோ வெளி யிட்டு தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது.  இது குறித்து முன்னாள் நகர்மன்ற தலைவ ரும் சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பின ருமான வரத.ராஜமாணிக்கம் கூறுகையில், பழ னியைச் சார்ந்த மக்கள் மத்தியில் கும்பாபி சேகத்திற்கான பாஸ் கிடைக்கவில்லை என்ற குறை இருந்து வருகிறது.;  பல லட்சம் பேர்  இந்த  கும்பாபிசேகத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒரு சின்ன அசம்பாவிதமும் நடக்கா மல் போலீஸ் பாதுகாப்பும்  சட்டம் ஒழுங்கும்  சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகத்தையும் குறை சொல்ல முடியாது.  2 ஆயிரத்திற்கும்  மேல் பாஸ் வழங்கப்  பட்டுள்ளது. சாதாரண மக்கள் கும்பாபிசேக விழாவின் போது முருகனை அருகிலிருந்து பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்  தது உண்மை. இந்த சூழலை பயன்படுத்தி சங்பரிவாரத்தினர் உண்மைக்கு புறம்பான  செய்திகளை பரப்பி வருவது கண்டனத்திற்குரி யது. ஆகம விதிகளுக்கு புறம்பாக எதுவும் நடைபெறவில்லை என்ற நிலையில் அதை பூதாகரமாக மாற்றுவது ஏற்புடையது அல்ல. பழனி மக்கள் இது போன்ற அவதூறு பிரச்சா ரங்களுக்கு இரையாகக்கூடாது என்று தெரி வித்தார். 

இஷ்டப்படி செல்ல முடியாததால்  சங் பரிவாரத்தினர் ஆத்திரம்

இதுபற்றி பழனி நகர்மன்ற துணைத் தலை வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்  செயலாளருமான  கே.கந்தசாமி கூறுகையில்,  ஆகமம் என்ற பெயரில் பழனி முருகன் கோவில்  குறித்து அவதூறு பரப்பும் பாஜக மற்றும் சங்பரி வார கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வன்மையாக கண்டிக்கிறது.  பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டு களுக்கு பிறகு சிறப்பாக கும்பாபிசேகம் நடை பெற்றுள்ளது. அனைத்து மக்களும் பாராட்  டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனை  சீர்குலைக்கும் வகையில் அடுத்த நாளே  இந்த கோவிலில் ஆகம விதிகளை மீறியதாக  அவதூறுகள் பரப்பப்படுகின்றன. சங்பரிவா ரத்தினர் கூறுவது போல்  எந்த ஆகம விதிமுறை  மீறலும் நடைபெறவில்லை. உயர்நீதிமன்ற நீதி பதிகளோ,  அதிகாரிகளோ மூலவர் கருவறைக்  குள் போகவில்லை.  கடந்த காலத்தில் பாஜக  மற்றும் சங் பரிவாரத்தினர் எப்போது வேண்டு மானாலும் போகலாம்,  யார் வேண்டுமானா லும் கோவிலுக்குள் போகலாம், வரலாம் என்ற  இருந்த நிலை இப்போது இல்லை. இப்போது இணை ஆணையர் தலைமையிலான அற நிலையத்துறை தேவஸ்தான நிர்வாகம் அதனை ஒழுங்குபடுத்தியுள்ளது. அந்த ஆத்தி ரத்தின்  வெளிப்பாடு தான் ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சிலர் சென்றதாக பொய்யாக  அவதூறு பரப்புகிறார்கள்.  இந்த கும்பாபி சேகத்தில் ஏதாவது பிரச்சனை வருமா என்று எதிர்பார்த்தார்கள். எந்த பிரச்சனையும் வர வில்லை. அறநிலையத்துறையே வேண்டாம்  என்று சொல்லிக்கொண்டு பழனி முருகன் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்  கொள்ள முயல்கிறார்கள். கும்பாபிசே கத்திற்கு முதல் நாள் பாஜக மாவட்டத்தலைவர் எனக்கு நிறைய பாஸ் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். பிறகு அவரே அமைதியாக போய்விட்டார். அதே போல புலிப்பாணி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத்தான் இந்த கோவில் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு தனி நபருக்கு இந்த கோவில் எப்படி சொந்த மாகும். அவர் இந்த கோவிலைச் சுற்றி குளிக்கும் இடம், கழிப்பறை இடம் என்று பல கட்டடங்களை கட்டி வியாபார தலமாக மாற்றிக்கொண்டுள்ளார். எனவே புலிப்பாணி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள், செந்தில்  கனகராஜ் ஆகிய இருவரும் இரண்டு வரு டங்களுக்கு முன் அய்யப்பன் கோவிலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பெண்கள் வழிபாடு  செய்ய அனுமதித்தை கண்டித்து

பிஜேபி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வரை யும் முன்னால் நகர்மன்ற தலைவரையும் மிக  அநாகரீகமான முறையில் பேசினார்கள்.  காவல்துறையில் புகார் செய்தும் அப்பொழுது இருந்த அதிமுக அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.இப்படி எதாவது ஒரு பிரச்சினை செய்து தங்களை பிரபல படுத்தி கொள்வதுதான் இவர்கள் வேலை. ஒன்றிய  அமைச்சர் எல். முருகன் பாஜக  மாநில தலைவராக இருந்த பொழுது பழனிக்கு வேல்  யாத்திரை நடத்தி வந்த சமயத்தில் திரு ஆவினன்குடியில் கருவறையை புகைப்படம் எடுத்து தங்கள் கட்சியினுடைய இணைய தளத்தில் வெளியிட்டார்கள். பக்தர்களின் கடும்  கண்டனத்துக்குப் பிறகு  இணையதளத்தில் இருந்து அந்த படத்தை அகற்றினார்கள். அதை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் அன்றைக்கு அந்த செயலை கண்டித்தது  ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையில் அனு மதி கேட்ட போது காவல்துறை மறுத்துவிட்டது அதெல்லாம் இப்பொழுது வெளியே வரும் என்ற காரணத்தால் தான் இப்பொழுது இது  போன்ற அவதூறுகளை பாஜகவினர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் .இது போன்ற சங்பரி வார் கும்பலின் பொய் பிரச்சாரத்தையும் அவ தூறுகளையும் மக்கள் பொருட்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

;