districts

img

சிபிஎம் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக எல்.வடிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளராக எஸ்.மணிவண்ணன் தேர்வு

புதுக்கோட்டை,  அக்.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றிய 13-வது மாநாடு ஆலங்குடியில் சனிக்கிழமை  நடைபெற்றது. மாநாட்டி ற்கு என்.தமிழரசன், ஏ.குமார வேல், பி.ஸ்டெல்லா மேரி ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை கட்சியின் முதுபெரும்  தோழர் பெரி.குமாரவேல் ஏற்றி வந்தார். மாநாட்டை தொ டங்கி வைத்து கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கவிவர்மன் உரையாற்றி னார்.  மாநாட்டில் திருவரங்கு ளம் ஒன்றியம் மேற்கு, கிழக்கு ஒன்றிய குழுக்க ளாக கட்சி ஸ்தாபனம் பிரிக் கப்பட்டது. மேற்கு ஒன்றி யக் குழு உறுப்பினர்களாக 17 பேரும் ஒன்றிய செய லாளராக என்.வடிவேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிழக்கு ஒன்றிய குழு உறுப்பி னர்களாக 12 பேரும் ஒன்றிய  செயலாளராக எஸ். மணி வண்ணனும் தேர்வு செய்யப் பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி கட்சியின் மாநில குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை சிறப்புரை யாற்றினார்.  மாலையில் நடைபெற்ற பேரணி பொதுக் கூட்டத் திற்கு மேற்கு ஒன்றியச் செய லாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத் துரை எம்எல்ஏ, மாவட்ட செய லாளர் எஸ். கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ. ஸ்ரீதர் உள்ளிட்டோர் பேசினர்.  ஆலங்குடியில் வாச னைத் திரவிய தொழிற் சாலை அமைக்க வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். தைல  மரங்களை அழித்து இயற்கை  காடுகளை வளர்க்க வேண்டும். நிரந்தர நீர்ப்பா சன வசதியை ஏற்படுத்தும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

;