மதுரை, ஆக.26- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கைகளான மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதி யம் தொழிலாளர் நலத்துறை அறி வித்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஊதி யத்தை உச்சநீதிமன்ற அறிவிப் பின்படி ரூ.25 ஆயிரம் ஆக முறை யாக திருத்தி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தொழிலாளர் நலத்துறை முன்பு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. கிழக்கு கிளை செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மேற்கு கிளைச் செயலாளர் சிவக்குமார், மாநிலச் செயலாளர் கணேசன், மாநில பொதுச் செய லாளர் விவேகானந்தன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் ஆகியோர் பேசினர்.