மதுரை, டிச.24- மதுரை மாநகராட்சி 37 வது வார்டு அகிம்சாபுரம் 4, 5, 6 ஆகிய தெருக்களுக்கு உட்பட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பழுதடைந்ததால் கழிவுநீர் செல்வதில் சிரமம் உள்ளது. குறிப்பாக மார்க்கெட் பகுதியில் அதிக அளவு கழிவுநீர் சாலையில் செல்வதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஜான்சிராணி 1, 2, 3 உள்ளிட்ட தெருக்களிலும் கழிவுநீர் செல்வ தில் சிரமம் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில் இப்பகுதி முழு வதும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக் கப்பட்டுள்ளது. கழிவுநீர் குழாய் இணைப்பு 40 ஆண்டுகள் பழமையானது. அடிக்கடி இப் பகுதியில் கழிவுநீர் செல்வது தடைபடுகிறது. அதிக அளவில் கழிவுநீர் வெளியேறுவதால் பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படு கிறது. இதற்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவு நீர் குழாய் இணைப்பு தற்காலிகமாக கொடுக்கப் பட்டது. அதற்குப் பின் பழமையான இணைப்பு களை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. ‘மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் செல்லக்கூடிய பழைய கழிவுநீர்க் குழாய் களை அகற்றி புதிய குழாய்கள் பதிக்க வேண்டும் என்றனர்.