districts

img

கடமலை அருகே வைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

கடமலைக்குண்டு, ஜூன் 3- தேனி மாவட்டம், கட மலைக்குண்டு கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் அனைத்  தும் கரட்டுப்பட்டி மூல வைகை ஆற்றில் கலந்து வரு கிறது.  மழை பெய்யும் நேரங்க ளில் சாக்கடை கழிவு நீருடன்  பிளாஸ்டிக் குப்பைகளும் ஆற்றில் கலக்கின்றன. இத னால் ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில்  குவிந்து காணப்படுகிறது. இதன் அருகே உறை கிணறு கள் அமைந்துள்ளதால் குடி நீர் மாசடையும் நிலை காணப்  பட்டது. எனவே ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவு களை அகற்ற வேண்டும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில் உலக  சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு சனிக்கிழமையன்று கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கரட்டுப்  பட்டி வைகை ஆற்றில் குவிந் திருந்த பிளாஸ்டிக் குப்பை கள் அகற்றும் பணிகள் நடை பெற்றது.  கடமலைக்குண்டு தூய்  மைப்பணியாளர்கள் பிளாஸ் டிக் குப்பைகளை அகற்றும்  பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணிகளை கடமலைக் குண்டு ஊராட்சி மன்ற தலை வர் சந்திரா தங்கம், ஊராட்சி  செயலர் சின்னச்சாமி ஆகி யோர் பார்வையிட்டனர். 2  நாட்களில் பிளாஸ்டிக் குப்  பைகள் முழுமையாக அகற் றப்படும். மேலும் அடுத்த கட்டமாக கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகை யில் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்  கப்படும் என ஊராட்சி தரப்  பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;