மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.