மதுரை, ஆக.11- மணிப்பூரில் கலவ ரத்தை கட்டுப்படுத்தி அமைதி ஏற்படுத்த தவறிவரும் ஒன்றிய -மாநில பாஜக அரசுகளைக் கண்டித்தும் பொது சிவில் சட்டம் தேவை யில்லை என்று வலியுறுத்தி யும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரை செல்லூர் 50 அடி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட் டக்குழு உறுப்பினர் பி.முகமது அலி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி.ரசூல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எல். ஞானசுந்தரம், ஜோசப் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவாட்டத் தலைவர் கே. அலாவுதீன், செயலாளர் என். கணேச மூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், பல்சமய உரையாடல் பணிக்குழு செயலர் ஜே. பெனடிக்ட் பர்ணபாஸ், அய்யம்பாளையம் பங்குத் தந்தை பாரிவளன், பெரியார் நெறியாளர் பி.வரதராசன், 27 வது வார்டு திமுக வட்ட செயலாளர் எம். கருப்புராஜ் மதிமுக டி.நாகராஜ், மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் எஸ். மகபூப் ஜான், 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் உள்ளிட்டோர் பேசினர். சிறு பான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர் முகமது சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மணிப்பூரில் அமைதி வேண் டும். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் அநீதி இழைக்கப்பட்ட பெண்க ளுக்கு நியாயம் வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு பெண்களை, குழந்தைகளை கொலை செய்தவர்களை கடு மையாக தண்டிக்க வேண்டும். பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளம் சட்டமன்றம் ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் அஜண்டா வை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஸ்டாலின் நன்றி கூறினார்.