districts

img

நீதிமன்ற உத்தரவை மீறி கண்மாய் கரையில் சாலை அமைத்த தனியார் கல்குவாரி நிறுவனம்: சிபிஎம் மறியல்

அருப்புக்கோட்டை, மே 8- அருப்புக்கோட்டை அருகே பன்னிக்  குண்டு கண்மாய் கரையில் உயர் நீதி மன்ற உத்தரவை மீறி சாலை அமைத்த  தனியார் கல்குவாரி நிறுவனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். விருதுநர் மாவட்டம், புலியூரான் ஊராட்சிக்குட்பட்டது பன்னிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தில் 40 ஏக்கரில்  பரப்பளவில் கண்மாய் இருக்கிறது. பருவ காலங்களில் இந்த கண்மாய் பாச னத்தை நம்பி கோணப்பனயேந்தல் மற்றும் பன்னிக்குண்டு விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் விவாசயம் செய்து வருகின்றனர். விவசாயத்தை சீர்குலைத்திடும் வகையில்  கல்குவாரி நிறுவனம் ஒன்று கண்மாய் உள்பகுதி, கரைப்பகுதி மற்றும் வடபுறத்தில்  உள்ள நீர் வரத்து ஓடைகளையும் ஆக்கி ரமித்து சாலைஅமைத்து நூற்றுக்க ணக்கான கனரக வாகனங்களை இயக்கி வந்தனர். இதனால் விவசாயம்  கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மண்  மற்றும் தூசு படிவதல் ஆடு மாடு களுக்கான மேச்சலும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்றை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் முடிவில் கண் மாய் கரையில் கனரக வாகனங்கள் செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால் கண்மாயின் தன்மை பாதிக்கப்படும். மறு உத்தரவு வரும் வரை கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

 இந்த நிலையில், மற்றொரு தனி யார்  கல்குவாரி  நிறுவனம்  உயர்நீதி மன்ற உத்தரவை மீறி, அதே பகுதி யில் கண்மாய் கரையில் சாலை  அமைத்து கனரக வாகனங்களை இயக்கி வருகிறது. இதுகுறித்து வரு வாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறையினருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்  டத்தில்  ஆட்சியரிடம் அப்பகுதி விவ சாயிகள் புகார் தெரிவித்தும் நட வடிக்கையும் எடுக்கவில்லை. மறியல் போராட்டம்  இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் மூன்று  கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள்,  கண்மாயில் வாகனங்கள் சென்று வந்த  பாதையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அருப்புக் கோட்டை துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், கண்மாய் கரையிலும், நீர் வரத்து ஓடையிலும் கனரக வாக னங்கள் செல்லாத வகையில் பெரிய கற்தூண்களை ஊன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து சிறிது நேரத்தில் கற்கள் ஊன்றப்பட்டன. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் எம்.கண்ணன், மாவட்டச் செயற்  குழு உறுப்பினர்கள் எம்.முத்துக் குமார், வி.முருகன், ஒன்றியச் செயலா ளர் எம்.கணேசன், ஊராட்சிமன்றத் தலைவர் சத்தியன், ராபர்ட், மகா லிங்கம் ஆகியோர் உட்பட பலர் பங் கேற்றனர்.