திருவில்லிபுத்தூர், நவ.14- திருவில்லிபுத்தூர் ஒன்றி யம் வேப்பங்குளம் கிராமத் தில் அருந்ததியர் மக்கள் (சுமார் 17 குடும்பங்கள்) கண் மாய்க் கரையில் அருகில் வசித்து வருகின்றனர் இவர் களது வீடுகளை இடிப்ப தற்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் ஒன்றியஅலுவலகத்திற்கு வருகை தந்து செயலாளர் சசிக்குமாரிடம் முறையிட்ட னர். இதையடுத்து வட்டாட்சி யரை நேரில் சந்தித்து சசிக் குமார் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மனுவில் 50 ஆண்டு காலம் குடியிருந்து வரும் அருந்ததிய மக்களுக்கு அரசு உரிய மாற்று இடம் இலவச பட்டா, வீட்டு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மனுவைப் பெற் றுக் கொண்ட வட்டாட்சியர் ரங்கசாமி, கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வா ளர் ஆகியோர் மூலம் விசா ரணை செய்து உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.