districts

img

சேவை சாலை அமைத்துத்தரக்கோரி விருதுநகர் 4 வழிச் சாலையில் மக்கள் மறியல்

விருதுநகர், நவ.29- விருதுநகர் 4 வழிச் சாலை அருகே சேவைச் சாலை அமைத்துதரக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் -சாத்தூர் 4 வழிச் சாலையோரத்தில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, வடமலைக்குறிச்சி சாலை சந்திப்பு, பாவாலி விலக்கு ஆகிய  பகுதிகள் உள்ளன. இதில், வடமலைக் குறிச்சி விலக்கிலிருந்து பாவாலி விலக்கு  வரை சேவைச் சாலை இல்லை. மேலும், சாலையின் ஓரத்தில் உள்ள மண் சாலை யை சேவைச் சாலையாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மண் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் 4 வழிச் சாலையின் எதிர் திசையில் பயணித்து வருகின்றனர். இந்தநிலையில், காவல் துறையினர் அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகை வசூ லித்துள்ளனர். எனவே, இதனைக் கண் டித்து பொதுமக்கள் ஒன்று திரண்டு 4 வழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். உடனடியாக சேவைச் சாலை  அமைக்க வேண்டும் எனவும், சாலை  அமைக்காமல் அபராதத் தொகை வசூ லிக்க கூடாது எனவும் கோஷமிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பொது மக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சேவைச் சாலை அமைத்திட அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்த னர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். தீ.ஒ.மு பலமுறை புகார் ஏற்கனவே, வடமலைக்குறிச்சி விலக்கு முதல் பாவாலி விலக்கு  வரை  சேவைச் சாலை அமைக்க வேண்டு மென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்ட தலைவர் எம். முத்துக்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி அக்கடிதத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்  துரை செய்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

;