districts

img

அரசு உதவிபெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றக்கோரி மக்கள் போராட்டம்

மதுரை, ஆக.6-  மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா  கரடிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் பெரு மாள்பட்டி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் சித லமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்தப் பள்ளி யானது அரசு உதவி பெறும்  பள்ளியாக உள்ளது.  கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பள்ளி கட்டிடம் மிக மோசமான நிலையில் இருப்பதாக கூறி ஆசிரி யர்கள் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து  டிசி வாங்கி சென்று அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி சொல்லியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து கிராம பொதுமக்கள் தொடக் கக்கல்வி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்ச னைக்கு மூல காரணமாக இருப்பது அரசு உதவி  பெறும் பள்ளி நிர்வாகம் தான் என்றும் ஆகையால் உடனடியாக நிர்வாகத்தை கலைத்து விட்டு அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும். சிதிலமடைந்த கட்டி டங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டித் தர  வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். பேருந்து வசதி இல்லாத இந்த கிராமத்தில் இருந்து நடந்து செல்வது சிறு குழந்தைகளுக்கு மிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த பள்ளி முழு மையாக செயல்பட கல்வித் துறையும் மாவட்ட நிர்வாக மும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

;