திருவண்ணாமலை,டிச.5- திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் டிச.6 அன்று தீப விழா நடைபெறுகிறது. சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து டிச.5 முதல் 8 ஆம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து திங்க ளன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணா மலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரயில் டிச.6 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைகிறது. இதேபோல், புதுச்சேரியிலிருந்து திங்களன்று (டிச.5) மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழி யாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு சென்ற ரயில், டிச.6 அன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.
அதேபோல் கடலூர் மாவட்டம் திரு பாதிரிப்புலியூர், வேலூர் மார்க்கங்க ளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டிச.5 முதல் 7 ஆம் தேதி வரை 3 நாட்கள் 2,700 சிறப்பு பேருந்து கள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களிலிருந்தும் திருவண்ணா மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்படி விழுப்புரம்- திருவண் ணாமலை வழித்தடங்களில் 317 பேருந்துகள், திண்டிவனம்-திரு வண்ணாமலை வழித்தடங்களில் 82, புதுச்சேரி-திருவண்ணாமலையில் 180, திருக்கோவிலூர்- திரு வண்ணாமலையில் 115, கள்ளக் குறிச்சி-திருவண்ணாமலை வழித் தடங்களில் 200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகளின் இயக் கத்தை முன்னிட்டு முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந் துகளை ஏற்பாடு செய்யவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்ய வும் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.