மதுரை, ஆக.7- நூறு நாள் வேலைத் திட்டத்தில் அட்டை வைத் துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலை திட்டம் 2024-25 நிதியாண்டிற்கான வேலையை உடனடியாக தொ டங்க வேண்டும். பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். சட்டபூர்வ கூலியான 319 ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாவும், வீடுகட்ட 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் 2024-25 நிதி ஆண்டிற் கான ஒன்றிய பட்ஜெட்டில் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மதுரை மாவட்டம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியக் குழுக்கள் சார்பில் புதன்கிழமை ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். மாயாண்டி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா பேசினார். நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் பேசினார்.
கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலா ளர் எம்.கலைச்செல்வன், மேற்கு ஒன்றி யச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பால கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு ஒன்றியச் செயலா ளர் பி.அழகர்சாமி, பொருளாளர் கார்த்திகைசாமி, மேற்கு ஒன்றியத் தலைவர் வி.பச்சையப்பன், செயலா ளர் எஸ்.நாகராஜன், பொருளாளர் சி. முருகன், மாதர் சங்கக் மேற்கு ஒன்றி யச் செயலாளர் எஸ்.சரஸ்வதி உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர் தெரிவிக்கையில், “ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ கத்திற்கான நிதியை குறைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில், தமி ழகத்தில் 32 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. சட்டப்பூர்வ கூலித் தொகையைகூட வழங்குவதில்லை. விவசாயத் தொழிலாளர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றவில்லை என் றால், மாநில அளவில் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
தொடர்ந்து மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு, பேரணியாக வந்து மேற்கு ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.