districts

மதுரை முக்கிய செய்திகள்

தனிநபர் நலனுக்காக வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள் 

தேனி, நவ.28-  பெரியகுளம் அருகே ஓய்வு வருவாய்த்துறை அதிகாரி யின் நலனுக்காக தலித் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி  குழந்தைகள் உட்பட குடும்பத்தினரை நடுத்தெருவில் நிறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது கட்சியின் தேனி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  எம்.ராமச்சந்திரன், பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜெய பாண்டி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனை சந்தித்து மனு அளித்தனர்.  மனுவில், தென்கரை பேரூராட்சி, தெ.கள்ளிப்பட்டி, தண்ணீர் துறை தெருவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முத்து என்பவர் வசித்து வந்தார். பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி பெரியகுளம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் முத்துவின் வீட்டை தரைமட்டமாக இடித்து  விட்டனர். இந்த வீட்டில் முத்துவின் மகன் இளையராஜா, தனது மனைவி, ஏழு வயதிற்குட்பட்ட இரு பெண் குழந்தை களுடன் வசித்து வந்தார். தற்போது குழந்தைகளுடன் குடும்பமே நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளின் பாடப் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இடிபாடுகளுக்குள் சிக்கி வீணானது. இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு ஏதும் அகற்றப்படாத நிலையில் ஒரு வீட்டை மட்டும் குறிவைத்து இடித்து தரை மட்டமாக்கிய நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியா ளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆகியோர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வர்களுக்கு அதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனையிடம் வழங்க உத்தரவு  மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் முரளீ தரன், உரிய அதிகாரியை அழைத்து உடனடியாக மனை யிடம் வழங்க உத்தரவிட்டார்.

வட்டார அளவிலான கலைத் திருவிழா  உத்தமபாளையத்தில் இன்று துவக்கம்

தேனி, நவ.28- உத்தமபாளையம் வட்டார அளவிலான கலைத் திரு விழா போட்டிகள் வட்டார வள மையம் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கு கிறது. இதுகுறித்து உத்தமபாளையம் வட்டார வள மைய  மேற்பார்வையாளர் ச.அருணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  இந்தத் திருவிழாவில் கவின் கலை, வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல், நடனம், நாடகம், பாடல்,  பேச்சு, கதை, கவிதை, கட்டுரை, பட்டிமன்றம், பலகுரல்,  ஓவியம், புகைப்படம் என ஏராளமான பிரிவுகளில், உத்தம பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-12-ஆம் வகுப்பு  வரை குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி அளவில் தேர்வான ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்க உள்ளனர்.மொழி ஆசிரி யர்கள், கலை ஆசிரியர்கள் நடுவர்களாகச் செயல்பட உள்ளனர். வட்டார அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் குழந்தைகள் அடுத்த வாரம் மாவட்ட அளவில் கலந்து கொள்வர். மாவட்ட அளவில் தேர்வாகக்கூடிய குழந்தைகள் மாநில அளவில் கலந்து கொள்வர். அந்த  குழந்தைகளுக்கு அரசின் சார்பில்“கலையரசன், கலை யரசி” விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

இராமநாதபுரம், நவ.28- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூ ராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தக்கடை  வளாகத்தில் அரசு ஆணைப்படி மாற்றுத்திறனாளி களுக்கு கடை ஒதுக்கித் தர வேண்டும். இதற்கான தீர்மானத்தை பேரூராட்சி நிறைவேற்றித் தர வேண்டும் திங்களன்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் செயல் அலு வலரிடம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஷ் மனு அளித்தார்.

நவம்பர் புரட்சி தின பேரவை

இராமநாதபுரம், நவ.28- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர்  புரட்சி தின பேரவை தாலுகா செயலாளர் கே.ஜெய காந்தன் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் ஏ.நாகநாதன், மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ‌எம்.முத்துராமு, க.கருணாகரன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆதி ரெத்தினம், ஆர்.சேதுராமு, வி.அருள்சாமி, ஆர்.பால்ராஜ், என்.மணிகண்டன், அஞ்சுகோட்டை ஊராட்சி மன்றத்  தலைவர் வி.பூபாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதார் இணைப்பு முகாம்

பழனி, நவ.28- பழநியில் இரயில்வே பீடர் சாலையில் இயங்கும் மின் வாரிய அலுவலக வளாகத்திலுள்ள பிரிவு அலுவல கத்தில், நவ.28ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி  வரை வரை பண்டிகை நாட்கள் தவிர காலை 10. 30 மணி முதல் மாலை 5.15 வரை பயனீட்டாளர்களுக்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆன ஆதார் எண் இணைப்பு முகாம் செயல்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

பழங்குடியின மக்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்தது தொடர்பான வழக்கு

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை, நவ.28-  பட்டியல் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு துறை களுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி  அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கக் கோரும் வழக்கில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை செயலர், தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்  துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு அரசு-ஒன்றிய அரசு  இணைந்து 2018-2019, 2019 -2020, 2020-2021  ஆகிய ஆண்டுகளில் பழங்குடியின மக்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ தற்காக ரூ.1,310 கோடி ஒதுக்கீடு செய் துள்ளது. இதில், ரூ.265 கோடி பழங்குடியின மக்க ளுக்கு செலவிடப்படவில்லை. 2019-2020-ஆம் நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.10 கோடி, 2020-2021-ஆம் நிதியாண்டில் வனத்  துறைக்கு ரூ. 67.77 கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு ரூ.58.17 கோடி  என மொத்தம் ரூ.129.9 கோடி பிற துறை களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பழங்குடியின மக்களின் அடிப்படைகளான நில உரிமை பட்டா, குடி யிருப்பு வீடுகள், மின்சாரம், சாலை, சுகாதா ரம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்  முழுமையாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை திருப்பி அனுப்புவது ஏற்கத்  தக்கதல்ல. 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய  நிதி ஆண்டுகளில் பழங்குடியின மக்களுக் காக ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு துறை களுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி  அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க உத்தர விட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், எந்தத் துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்த துறைகளி லேயே பணம் முழுமையாக பயன்படுத்தப் படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், தமிழக ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

நத்தம் அருகே சாலை மறியல்

நத்தம், நவ.28- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி  பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவரு கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை முன்பு மழைநீர் தேங்கியுள்ளது. சாலையில்  தேங்கியுள்ள நீரால் போக்குவரத்திற்கும் பள்ளிமாண வர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் மழைநீர் அகற்றப்படவில்லை. இத னால் தன்னெழுச்சியாகத் திரண்ட அப்பகுதி பொதுமக் கள், மாணவ மாணவிகள் நத்தம்-துவரங்குறிச்சி சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். நீரை அகற்ற உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த தைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கல்லூரிப் பேருந்தை  ஓட்டிய பள்ளி மாணவர்

மதுரை, நவ.28- சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்தை பள்ளி மாணவர் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து கல்லூரி நிர்  வாகம் பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்தது.  சேலம் மாவட்டம், ஓமலூரில் இயங்கி வரும் தனியார்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கும் இறக்குவதற்கும், ஏராளமான கல்லூ ரிப் பேருந்துகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை, சமூக ஊடக தளங்களில் ஒரு வீடியோ வைரலானது, அதில் “ஒரு கல்லூ ரிப் பேருந்தை பள்ளி மாணவர் இயக்கியுள்ளளார். இது  தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த திங்க ளன்று அந்தக் கல்லூரிக்குச் சென்றுள்ளனர்.  இந்தச் சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாக  கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. பேருந்து ஓட்டுநர் ஒரு வர், மாணவர்களை இறக்கிவிட்டு, ஜலகண்டாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது மரு மகனை பேருந்தை ஓட்டச் செய்துள்ளார். இதை அந்த  ஓட்டுநரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார், பின்னர் அதை அந்தப் பள்ளி மாணவர் அந்த ஊடக தளத்தில் பதிவேற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

ஆன்லைன் லாட்டரிக்கு தடை கோரும் வழக்கு அரசை விட பெற்றோருக்கே  அதிக பொறுப்பு: நீதிமன்றம்

மதுரை, நவ.28-  பதினெட்டு வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி விளையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்  கோரும் வழக்கில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலர், ஒன்றிய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த ஐயா சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தி ருந்தார். அதில், “ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளில் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்ப ரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளை யாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை  மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம்  நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்கள் சிதைந்  துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி,  ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாரா யண பிரசாத் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு  வந்தது அப்போது நீதிபதிகள், 18 வயதிற்கு கீழான வர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டு கள் தெரியவந்தது எப்படி? இந்த விஷயத்தில் பெற்றோர்  களுக்கே அதிக பொறுப்பு உள்ளது. பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, போதிய அக்கறை காட்டுவதில்லை. அதனாலேயே இது போன்ற நிகழ்வு கள் நடக்கின்றன” என கருத்துத் தெரிவித்து ஒன்றிய தக வல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், ஒன்றிய நிதித்  துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

செண்பகத் தோப்பு பகுதியில் மா மரங்களை  சேதப்படுத்திய காட்டு யானை

திருவில்லிபுத்தூர், நவ.28- திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் சிங்கம்மாள்புரம் வரு வாய் கிராமத்திற்கு உட்பட்ட செண்பக தோப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்க ளாக சுற்றித் திரியும் ஒற்றை யானை நூற்  றுக்கு மேற்பட்ட மா மரங்களை சேதப் படுத்தியது. யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள  சிங்கம்மாள்புரம் கிராமத்தில் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் மா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த  மூன்று நாட்களாக இரவில் ஒற்றை காட்டு  யானை நடமாட்டம் உள்ளது. அந்த யானை  செல்வராஜ், கருப்பாயம்மாள், வெள்ளை யன் உள்ளிட்ட ஐந்து விவசாயிகளுக்குச் சொந்தமான மாந்தோப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை சேதப் படுத்தி உள்ளது. இந்த சேதம் குறித்து விவசாயிகள் வனத்துறை, தோட்டகலைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தனர். திங்கட் கிழமை யன்று கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம், தோட்டக்கலை அதிகாரி கண்ணன் மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு  செய்து, சேத அளவை மதிப்பீடு செய்த னர்.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தமிழ் நாடு விவசாயிகள் சங்க வட்டாரச் செய லாளர் பெருமாள் கூறுகையில், ஒற்றை யானையை காட்டிற்குள் விரட்டவும், விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை களை விரட்டுவதற்காக வனத்துறையால் அமைக்கப்பட்ட சோலார் வேலி முறை யாக பராமரிக்கப்படவில்லை. இதனால் யானை தோட்டத்திற்குள் வருவதற்கு வாய்ப்பு  உள்ளது. வனத்துறை சோலார் வேலியை சீரமைக்க வேண்டும் என்றார்.

ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவரைக் கண்டித்து  திமுக-கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு

தேனி, நவ.28- ஆண்டிபட்டி பேரூராட்சிக் கூட்டத்தில் திமுக-கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.  திங்களன்று நடைபெற்றக் கூட்டத்தில் மொத்தமுள்ள 18 உறுப்பினர்களில் திமுக  உறுப்பினர்கள் ஒன்பது பேர், ஒரு சிபிஐ  உறுப்பினர், ஒரு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர், அ.தி.முக உறுப்பி னர்கள் ஐந்து பேர், சுயேட்சைகள் இரண்டு  பேர் என 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் திமுக பேரூராட்சித் தலைவர் சந்திரகலா தலைமையில் நிர்வாக அலு வலர் சின்னசாமிபாண்டியன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த  சொத்துவரி, தொழில்வரி சம்பந்தமாக உரிய ரசீது கூட்டத்தில் காண்பிக்கப்பட் டதா? அதற்கு விளக்கம் கொடுங்கள் என  திமுக 14-ஆவது வார்டு உறுப்பினர் சரவ ணன் மற்றும் 16-ஆவது வார்டு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்  னன் கேட்டதற்கு உங்களிடம் பதில் சொல்ல முடியாது என பதில் கூறப்பட்டதைக் கண் டித்து திமுக உறுப்பினர்கள் சரவணன், பாலசுப்பிரமணி, மஞ்சு, கஸ்தூரி, பரா சக்தி, 16-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்னன், சிபிஐ உறுப்பினர் ஆகியோர் வெளி நடப்பு செய்தனர். தொடர்ந்து சிபிஐ உறுப்பினர் தமது கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் பெரு மாள் தலைமையில் 50 பேருடன் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலை வர் சந்திரகலாவையும், செயல் அலுவல ரையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

மேலாமத்தூருக்கு பேருந்து வசதி  ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், நவ.28- விருதுநகர் அருகே உள்ள மேலாமத்தூரில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் அரசுப்  பேருந்து வசதி செய்து தர வேண்டுமென சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.ராஜேந்திரன், கிளைச் செயலாளர் மணிகண்டன்,  பொன்ராம், மாரி ஆகியோர் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி யிடம் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: விருதுநகர் அருகே  உள்ள மேலாமத்தூர், சாத்துப்பிள்ளைபட்டி, முத்துக்கும ராபுரம், சிதம்பராபுரம், வெள்ளூர் ஆகிய கிராமங்களில் இருந்து  நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளி- கல்லூரி களுக்கு சென்று வருகின்றனர். பலர், தொழில்ரீதியாகவும் விருதுநகர், சிவகாசி நகரங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் உரிய நேரத்தில் சென்று வர பேருந்து வசதி  இல்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக் கம்தாகூர், போக்குவரத்து கழக மேலாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை நட வடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.






 

;