நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் மறுசீரமைக்கபட்ட புதிதாக தோற்றமளிக்கும் கட்டண கழிப்பிடத்தை மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிப்ரவரி 19 அன்று திறந்து வைத்தார். மண்டலத்தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் கலாராணி,உதவி செயற்பொறியாளர் ரகுராம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.