districts

img

சிறந்த ரத்த தான சேவை வாலிபர் சங்கத்திற்கு மீனாட்சி மிஷன் விருது

மதுரை, அக்.6-  தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு சிறந்த ரத்தக் கொடையாளர்களை பாராட் டும் நிகழ்ச்சி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம் பல அடிகளார், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், ரெட் கிராஸ் வி.எம்.ஜோஸ், லயன்ஸ் கிளப் ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல்வர் மரு. செந்தில்குமார், செயலாளர் மரு.கார்த்தி கேயன், முதன்மை செயலாளர் அழகு முனி, ரத்த தான வங்கி மேலாளர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.  சிறந்த கொடையாளர் அமைப்பு என்று  விருது மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் டி.செல்வராஜ், மாவட்டப் பொருளா ளர் எஸ்.வேல்தேவா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், விக்னேஷ், பிரசாந்த், சுரேஷ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் போனி ஃபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர்.