districts

img

சிவகங்கையில் உற்சாக வெள்ளத்தில் மே தினம் கொண்டாடிய செங்கொடி இயக்கம்

சிவகங்கை, மே 1- சிவகங்கை மாவட்டத்தில் 100 மையங்க ளில் மே தினக் கொண்டாட்டம் நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் தெரிவித்தார். சிவகங்கை நகரில் 20 மையங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. போக்குவரத்துப் பணிமனை, இந்திராநகர், மத்திய கூட்டுறவு வங்கி, டாஸ்மாக் அலுவலகம், கூட்டுறவு வங்கி, எல்ஐசி அலுவலகம், அரண்மனை வாசல், நேருபஜார், சுண்ணாம்பு காளவாசல், நகராட்சி அலுவலம், மஜீத் சாலை, கிராபைட் ஆலை ஆகிய இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மணியம்மா, மெய்யப்பன், விஷ்வநாதன், ஒன்றியச் செய லாளர் உலகநாதன், வேங்கையா,  விடு தலைராஜ், ஜபாருல்லா, முத்துச்சாமி, குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா, சுபாஷ் ஆகியோர்  பங்கேற்றனர். காளையார்கோவிலில் ஒன்றியச் செயலா ளர் தென்னரசு, கொல்லங்குடியில் மாவட் டக்குழு உறுப்பினர் மெய்யப்பன், ஆட்டோ சங்கத்தில்  திருநாவுக்கரசு, தேசிய நூற்பாலை அருகே திருநாவுக்கரசு, முடிதானே கிராமத்தில் மூத்த தோழர் துணைக்கண்ணு, மின்வாரிய அலுவலகம் முன்பு தனபாலன் ஆகியோர் கொடியேற்றினர்.

தேவகோட்டையில் கட்சியின் தாலுகா செயலாளர் செல்வம், ஆட்டோ நிலையத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, சுந்தரம், நகராட்சி அலுவலகம் அருகில் மூத்த  தோழர் ஏ.ஆர்.கே. மாணிக்கம், மின் மின்வாரிய அலுவலகம் முன்பு ராமநாதன் ,போக்குவரத்து பணிமனை முன்பு  கேசவன் ,திருவேகம்பத்தூரில் பெரியசாமி ஆகியோர் கொடியேற்றினர்.  மானாமதுரை கண்ணார் தெருவில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி,  சிப்காட் வளாகத்தில் உள்ள ஜிப் கம்பெனி அருகில்  செபஸ்டியான், மின்வாரிய அலுவலக  அருகில் வீராசாமி, நண்பர்கள் ஆட்டோ சங்கம்  அருகில் முத்துராமன், மின்வாரிய அலு வலக முன்பு விநாயகமூர்த்தி, மானாமதுரை அண்ணா சிலை அருகே முனியராஜ், பழைய  பேருந்து நிலையம் அருகே பரமாத்மா, ரயில்வே காலனி பகுதியில் டிஆர் இயு கொடி யை மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மண்பாண்ட தொழிலாளர் கலைஞர்கள் சங்கத்தின் பகுதியில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடியேற்றினர்.  முனைவென்றியில் சாமுவேல், கச்சாத்த நல்லூர்- காந்தி, சாத்தணி- ராஜமாணிக்கம், சாலைக்கிராமம்- தனசேகரன், கொடிமங்க லம்- மூத்த தோழர் ஆறுமுகம் ஆகியோர் கொடி யேற்றினர். தாலுகா செயலாளர் ராஜூ,  மாவட்டக்குழு உறுப்பினர் கே.அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்புத்தூரில் மாவட்டக்குழு உறுப்பி னர் முருகேசன் தலைமையில் ஆறு மையங்க ளிலும் கண்டரமாணிக்கம் உள்ளிட்ட எட்டு  மையங்களில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் மோகன் தலைமையிலும் கொடி யேற்றப்பட்டது. கல்லல் உட்பட பத்து மையங்க ளில் தாலூகா செயலாளர் ஆறுமுகம் தலை மையில் மேதினக் கொண்டாட்டம் நடந்தது.